வாட்ஸ்அப் ஆனது ஆகஸ்ட் மாதத்தில் 2.3 இந்திய கணக்குகளை தடை செய்துள்ளது. அதில் ஒரு லட்சத்திற்கு அதிகமான கணக்குகள் அதன் பயனர்களிடம் இருந்து எந்த புகாரும் வராமலேயே தடை செய்யப்பட்டதாக செய்தி தளம் தெரிவித்துள்ளது.
மாதத்தில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான இந்திய கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் தடை செய்துள்ளது. “ஆகஸ்ட் 1, 2022 மற்றும் ஆகஸ்ட் 31, 2022 இடையே, 2,328,000 வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டன. இவற்றில் 1,008,000 கணக்குகள் பயனர்களிடமிருந்து எந்த புகாரும் வருவதற்கு முன்பே முன்கூட்டியே தடை செய்யப்பட்டன” என்று வாட்ஸ்அப் மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் அதன் குறைதீர்க்கும் சேனல் மூலம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் ஜூன் மாதத்தில் 2.2 மில்லியனுக்கும் அதிகமான இந்திய கணக்குகள் WhatsApp ஆல் தடை செய்யப்பட்டன. முன்னதாக, மே மாதத்தில் இதுபோன்ற 1.9 மில்லியன் கணக்குகளும், ஏப்ரலில் 1.6 மில்லியன் கணக்குகளும், மார்ச் மாதத்தில் 1.8 மில்லியன் கணக்குகளும் வாட்ஸ்அப்பால் தடை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த கடுமையான IT விதிகள், பெரிய டிஜிட்டல் தளங்களில் 5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட தளம் ஒவ்வொரு மாதமும் இணக்க அறிக்கைகளை வெளியிட வேண்டும், அப்படி பெறப்பட்ட புகார்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களைக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்கள் தன்னிச்சையாக உள்ளடக்கத்தைக் குறைப்பதிலும், பயனர்களை ‘டி-பிளாட்ஃபார்மிங்’ செய்வதிலும் குறிக்கோளாக உள்ளது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தன்னிச்சையான உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துதல், செயலற்ற தன்மை அல்லது தரமிறக்குதல் முடிவுகளுக்கு எதிராக பயனர்களுக்கு ஒரு புகார் முறையீட்டு பொறிமுறையை வழங்குவதற்கான புதிய சமூக ஊடக விதிமுறைகளை உருவாக்குவதில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அதனால் whatsapp தனது தளத்தில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.