+2 மாணவர்களின் கவனத்திற்கு!! அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

Photo of author

By Sakthi

+2 மாணவர்களின் கவனத்திற்கு!! அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

Sakthi

Updated on:

+2 மாணவர்களின் கவனத்திற்கு!! அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

நாளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கியமான அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரை நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் நாளை அதாவது மே 8ம் தேதி வெளியாகவுள்ளது.

மாணவ மாணவிகள் அனைவரும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள சில இணையதளங்களை அறிவித்துள்ளது.

இதற்கு மத்தியில் தமிழக அரசு பொதுத் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு என்ன படிப்பது, எந்த கல்லூரியில் சேர்ந்து படிப்பது, கல்விக் கடன், உதவித் தொகை எவ்வாறு பெறுவது என்ற சந்தேகங்களை 14417 என்ற எண்ணிற்கு அழைத்து தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

மற்ற மாநிலங்கள், பிற மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் தங்கள் குழந்தைகளை எவ்வாறு சேர்ப்பது என்பதற்கும் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.