2 கிராம்பு போதும்.. கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் முதுகு வலி 10 நிமிடத்தில் மாயமாகிவிடும்!!

Photo of author

By Divya

2 கிராம்பு போதும்.. கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் முதுகு வலி 10 நிமிடத்தில் மாயமாகிவிடும்!!

பெண்கள் தங்களின் கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.உணவுமுறை அனைத்தும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் மேம்பட அதிக கவனம் செலுத்துவது அவசியம்.

ஆனால் என்னதான் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தினாலும் கால் வலி,முதுகு வலி போன்றவை ஏற்படுவது இயல்பான ஒன்றாக உள்ளது.அதிக உடல் எடை காரணமாக முதுகு வலி ஏற்படுகிறது.

அது மட்டுமின்றி ஹார்மோன் மாற்றம்,தசைகளில் அழுத்தம் ஏற்படுதல் போன்ற காரணங்களாலும் முதுகுவலி ஏற்படுகிறது.கர்ப்பகாலத்தில் உண்டாகும் முதுகு வலியை குணமாக்க கீழ்கண்ட ஆரோக்கிய வழிமுறைகள் உதவிகரமாக இருக்கும்.

1)மஞ்சள்

2)கிராம்பு

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும்.பிறகு அதில் இரண்டு கிராம்பு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் முதுகு வலி குணமாகும்.

1)பிப்பிலி

2)தண்ணீர்

ஒரு கிளாஸ் சூடான நீரில் ஒரு தேக்கரண்டி பிப்பிலி பொடி சேர்த்து கலக்கி குடித்து வந்தால் முதுகு வலி முழுமையாக குணமாகும்.

1)இஞ்சி

2)இலவங்கப்பட்டை

200 மில்லி தண்ணீரில் ஒரு துண்டு இடித்த இஞ்சி மற்றும் ஒரு துண்டு பட்டை போட்டு கொதிக்க விட்டு வடிகட்டி குடித்து வந்தால் முதுகு வலி குணமாகும்.இந்த நீரில் தேன் சேர்த்து பருகலாம்.

அதேபோல் முதுகு,கை மற்றும் கால்களில் மென்மையான மசாஜ் செய்து வந்தால் இது போன்ற வலிகள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.