+ 2  மாணவர்களுக்கு ஆலோசனை கூட்டம்!! பள்ளிக்கல்வித்துறை பிறபித்த அதிரடி உத்தரவு!! 

+ 2  மாணவர்களுக்கு ஆலோசனை கூட்டம்!! பள்ளிக்கல்வித்துறை பிறபித்த அதிரடி உத்தரவு!!

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் +2 பொதுத்தேர்வுகள்   நடைபெற்று முடிவடைந்தது. அதற்கு அடுத்து கடந்த மே மாதம் 8 ஆம் தேதி +2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்தது. அந்த முடிவுகளில்  அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி என்ற முடிவு வெளியாகி இருந்தது. இந்நிலையில் சில மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களில் தவறுகள் இருப்பதாக கூறி மறு மதீப்பிடு செய்ய விண்ணப்பித்து இருந்தார்கள்.

மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் மேற்ப்படிபிற்கு சேர விண்ணப்பித்துள்ளார்கள். அதனையடுத்து பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைதேர்வுகளுக்கு விண்ணப்பித்திருந்தார்கள். அதனையடுத்து ஜூன் 19 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி  வரை துணைத்தேர்வு நடைபெற்றது.

மேலும் பொது தேர்வு எழுதாத மாணவர்கள் கட்டாயம் துணைத்  தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து தேர்வு எழுதாத மாணவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் அறிவித்திருந்தது.

அதனையடுத்து ஜூன் மாதம் நடைபெற்ற துணைத்தேர்வில் கலந்து கொள்ள பல மாணவர்கள் வரவில்லை. தற்போது அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு மேலாண்மை குழு கூட்டம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் அந்த கூட்டத்தில் 10 மற்றும் 12  ஆம் வகுப்பு பொதுத்  தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் பொது தேர்வு, துணைத்தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்கள் மற்றும் அவரிகளின் பெற்றோர்களை அழைத்து உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும். மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் சிறந்த ஆலோசனை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.