பொறியியல் கலந்தாய்வு தொடங்கும் தேதி வெளியீடு!! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!!

0
31
Engineering Consultation Start Date Released!! Minister Ponmudi's announcement!!
Engineering Consultation Start Date Released!! Minister Ponmudi's announcement!!

பொறியியல் கலந்தாய்வு தொடங்கும் தேதி வெளியீடு!! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!!

இந்த ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு அட்டவணை இன்று காலை 11 மணி அளவில் வெளியிடப்பட்டது. இதனை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.

தற்போது இந்த ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு வருகிற ஜூலை 22 ஆம் தேதி துவங்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, ஜூலை 22 முதல் ஜூலை 26 வரை சிறப்பு பிரிவினை சேர்ந்தவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.

அடுத்ததாக ஜூலை 28 ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டமாக கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில், ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி வரை பொது கலந்தாய்வும், ஆக்ஸ்ட் 9 முதல் 28 வரை இரண்டாம் சுற்றுக்கான கலந்தாய்வும் நடைபெறும் என்று அறிவிப்பு வந்துள்ளது.

இதன் பிறகு மூன்றாம் சுற்றுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 3 வரை நடைபெற இருக்கிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, எப்போதுமே மூன்று சுற்றுகளாக நடத்தப்படும் கலந்தாய்வு இந்த ஆண்டு நான்கு சுற்றுகளாக நடைபெற இருக்கிறது.

இந்த கலந்தாய்வு செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ளதால், மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு முன்னரே முடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 430 பொறியியல் கல்லூரிகளில் மொத்தமாக 1.57 லட்சம் இடங்கள் உள்ளது. சென்ற ஆண்டை ஒப்பிட்டு பார்ர்க்கும் போது இந்த ஆண்டு 3,100 பொறியியல் இடங்கள் கூடுதலாக உள்ளது.

இந்த கலந்தாய்விற்கு மொத்தம் 1,78,959 பேர் விண்ணப்பித்துள்ளனர். அனைத்து இடங்களும் இந்த ஆண்டு நிரப்பப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், ECE Advanced Technology, ECE Design and Technology  என்ற இரண்டு புதிய படிப்புகள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மாணவர்கள் ஒரு கல்லூரியில் சேர்ந்த பிறகு வேறு படிப்பிற்காக கல்லூரி மாறினால் அந்த கட்டணத்தை திருப்பி வழங்க வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறி உள்ளார்.

author avatar
CineDesk