கிணற்றில் குளிக்க சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

0
140

கிணற்றில் குளிக்க சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

ஊத்தங்கரை அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுமிகள் நீச்சல் தெரியாததால் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கோடால வலசை கிராமத்தைச் சேர்ந்த ஆதிமூலம் என்பவரின் மகள் ராதிகா. அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் ஆனந்தி. இருவருக்கும் 13 வயதே நிரம்பிய நிலையில் பள்ளிக்கூடம் திறக்கப்படாததால் அருகிலுள்ள கிணற்றுக்குச் சென்று குளிக்கலாம் என நினைத்துள்ளனர்.

நீச்சல் தெரியாத இருவரும் குளிப்பதற்கு கிணற்றில் இறங்கி மூழ்கியுள்ளனர்.

இதை அறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்குச் விரைந்து வந்தனர். மீட்கும் பணியில் முயற்சி செய்த அவர்களால் முடியாத நிலையில் உடனே தீயணைப்பு மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு வந்த தீயணைப்பு  வீரர்கள் பொதுமக்களின் உதவியால் ஒரு மணி நேரத்திற்கு பிறகு இரண்டு சிறுமிகளையும் சடலமாக மீட்டனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஹாரி பாட்டர் படத்தின் ஹீரோ ராபர்ட் பேட்டின்சனின் தி பேட்மேன் ட்ரைலர் சும்மா தெறிக்குது!
Next articleமூணாறு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்காக திருமாவளவன் கோரிக்கை