ஊட்டச்சத்து உறுதி செய்யும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசியோடு இலவச கேழ்வரகு ரேஷன் அட்டைதாரர்களின் விருப்பத்தின் பேரில் வழங்குவதற்காக 2023 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை முதலில் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் செயல்படுத்தி வந்த நிலையில் ஜூலை மாதம் முதல் தமிழகம் முழுவதும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
தற்பொழுது வரைய ரேஷன் கடைகளில் இலவச அரிசி, இலவச கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவற்றோடு ஒரு சிலிண்டர் வைத்திருக்கக் கூடியவர்களுக்கு மண்ணெண்ணெயும் வழங்கப்பட்டு வருகிறது. இதனோடு கூட மாதந்தோறும் 2 கிலோ கேழ்வரகு வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது வரை 690 மெட்ரிக் டன் கேழ்வரகு மாதந்தோறும் கொள்முதல் செய்யப்படுவதால் தமிழகம் முழுவதும் இதனை செயல்படுத்த முடியவில்லை என்றும் ஜூலை மாத அறுவடைக்கு பின்பு தமிழகத்திற்கு தேவையான 1360 மெட்ரிக் டன் கேழ்வரகும் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு கேழ்வரகு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுவதால் ஊட்டச்சத்து உறுதி செய்யப்படும் என்றும் கோதுமை கிலோ இரண்டு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் நிலையில் கேழ்வரகு கிலோ ஒரு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ரேஷன் அட்டைதாரர்கள் மாதா மாதம் 2 கிலோ கோதுமைக்கு பதிலாக தங்களுடைய விருப்பத்தின் பேரில் 2 கிலோ கேழ்வரகை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சிறுதானியங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கப்படுவதோடு அவர்களின் ஊட்டச்சத்துகளும் உறுதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.