காரைக்கால் பாமக செயலாளர் கொலையில் மேலும் 2 கூட்டாளிகள் அதிரடி கைது!

Photo of author

By Hasini

காரைக்கால் பாமக செயலாளர் கொலையில் மேலும் 2 கூட்டாளிகள் அதிரடி கைது!

Hasini

2 more accomplices arrested in Karaikal murder case

காரைக்கால் பாமக செயலாளர் கொலையில் மேலும் 2 கூட்டாளிகள் அதிரடி கைது!

காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி. 53 வயதான இவரை  கடந்த 22-ந் தேதி திருநள்ளாறில் உள்ள கட்சி அலுவகத்தில் இருந்து வீட்டுக்கு திரும்ப மோட்டார் சைக்கிளில் செல்லும் போது மர்ம நபர்களால் வழிமறித்து படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், அவரிடம் இருந்த ஒரு இடம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக கூலிப்படையை ஏவி தேவமணியை கொலை செய்தது தெரியவந்தது.
இந்த கொலை வழக்கில் மணிமாறன், அவரது தாயார் நவமணி 56, தமிழக ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி 59, அவரது மகன்கள் பிரபாகரன், ஜிந்தாகுரு, மயிலாடுதுறையை சேர்ந்த ராமச்சந்திரன் 54, அருண் 31 மற்றும் கூலிப்படையை சேர்ந்த மயிலாடுதுறை மேல  மருதாந்த தன்னலூரை சேர்ந்த சார்லஸ் என்ற சரண்ராஜ் 37 உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதைத் தொடர்ந்து தேவமணி கொலையில் மேலும் சிலரை தேடி வந்த நிலையில், மயிலாடுதுறை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கூலிப்படையில் ஒருவரான முனுசாமி மகன் கீர்த்திகரன் (21) என்பவரை திருநள்ளாறு போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் பதுங்கி இருந்த கூலிப்படையை சேர்ந்த மற்ற இருவரும் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து இதில் தொடர்புடையவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.