அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை! தனியார் பேருந்துகளுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு!

0
72

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன இதனை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்றைய தினம் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தீபாவளி சிறப்பு பேருந்துகளை ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒரு சில விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார்.

அதாவது தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் இருக்கக்கூடிய 20 ஆயிரத்து 371 பேருந்துகளில் 37 பேருந்துகள் பழுது உள்ளிட்ட காரணங்களால், நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

 

தீபாவளி பண்டிகையை ஒட்டி 20 ஆயிரத்து 335 பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகின்றன பொதுமக்கள் பாதுகாப்பாக எந்தவிதமான இடையூறும் இல்லாமல் பயணம் செய்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

இதுவரையில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 718 நபர்கள் சிறப்புப் பேருந்துகளில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திருக்கிறார்கள் இதில் 105051 பேர் முன்பதிவு செய்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விடவும் கூடுதலான கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது உறுதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் விழா காலகட்டமும் என்ற ஒரு கட்டணம் இல்லை இது போன்ற பெயர்களில் கூடுதலான கட்டணம் வசூலிப்பவர்கள் ஒலித் அவர்களை பொதுமக்கள் சுட்டிக் காட்டினால் கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் 5 ஆம்னி பேருந்துகளில்  சோதனை செய்தாலும் அதில் ராமர் டிராவல்ஸ் என்ற பேருந்து மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.மற்ற ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை இதற்கென்று தனியாக அமைக்கப்பட்ட குழுக்கள் தொடர்ச்சியாக சோதனையில் ஈடுபடும் என தெரிவித்திருக்கிறார் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்.

போக்குவரத்து பயணிகளுக்காக குறைந்த கட்டணத்தில் விற்பனை செய்யப்படும் அம்மா குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப் படும் பகுதியில் சிக்கல் உண்டாகி இருக்கிறது. இதனால் மாற்று இடம் தேர்வு செய்வது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது தீபாவளி பண்டிகை முடிவடைந்த பின்னர் முதலமைச்சரிடம் இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் பேருந்து நிலையங்களுக்கு பொதுமக்கள் எளிதில் வந்து சேர்வதற்காக மாநகரம் முழுவதும் சுமார் 270 இணைப்பு பேருந்துகள் இருபத்தி நான்கு மணிநேரம் இயக்கப்பட்டு வருகின்றன. தீபாவளிப் பண்டிகையை முடிவடைந்து பொதுமக்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக நாள்தோறும் இயங்கக்கூடிய 2,100 பேருந்துகள் உடன் 4 ஆயிரத்து 319 சிறப்பு பேருந்துகள் மற்ற முக்கிய ஊர்களிலிருந்து பல பகுதிகளுக்கு 5000 பேருந்துகள் என்று ஒட்டுமொத்தமாக 17 719 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என தெரிவித்து இருக்கிறார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.

ஆகவே ஒட்டுமொத்தமாக அரசுப் பேருந்துகள் மற்றும் ரயில்கள் ஆம்னி பேருந்துகளில் 3 லட்சம் நபர்கள் சென்னையிலிருந்து புறப்பட்டு தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று இருக்கிறார்கள் அதோடு மட்டுமல்லாமல் கார் இருசக்கர வாகனம் என்று சொந்த வாகனங்களில் ஏராளமானவர்கள் பயணம் செய்து இருக்கிறார்கள் இதன் காரணமாக, தாம்பரம் பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனால் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்று கொண்டு இருக்கின்றனர் என தெரிவித்திருக்கிறார் அமைச்சர் ராஜகண்ணப்பன்