2 முலாம்பழம் 18 லட்சம்!! எங்க தெரியுமா?

Photo of author

By Kowsalya

ஜப்பானில் இரண்டு யூபரி முலாம்பழம் 2.7 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது. அதைக்கேட்ட மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

 

ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ என்ற தீவில் பாரம்பரியத்தை குறிக்கும் விதமாக இந்த யூபரிய முலாம்பழம் விளைவிக்கப்படுகின்றன. ஒரு பாரம்பரிய ஏலத்தில் 2.7 மில்லியனுக்கு விலை போயுள்ளது. இது அமெரிக்க டாலரில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் அமெரிக்க டாலர்.

இந்தியாவில் 18,19,712 மிகப்பெரிய மதிப்பில் விற்கப்பட்டுள்ளது.

 

இது கடந்த ஆண்டின் விலையை விட 22 மடங்கு அதிகமாகும் என்று ஏல அமைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர். அதாவது,கடந்த ஆண்டு ஒரு ஜோடி முலாம்பழம்கள் ,1,20,000 மில்லியன் ய

யென்னுக்கு விற்கப்பட்டன.

 

ஒரு ஜோடி முலாம்பழம் ஒரு மொத்த சந்தையின் ஏலத்தில் ஐந்து மில்லியன் யென் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த முலாம்பழங்கள் ஹொக்கைடோ என்ற இடத்தில் மிகவும் பாரம்பரியமான முறையில் குளிர்காலத்திலும் வளர்க்கப்படுகிறது.. இந்த பழம் மிகவும் சுவையாக இருக்கும் என்பதால் இது ஒரு பாரம்பரியமாக நினைத்து பெருமைப்பட்டு வருகின்றனர். இதன் அறுவடை மே மாதத்தில் தொடங்கி ஆகஸ்டில் முடியும் என தெரிவித்தனர்.

 

நாம் இங்கே இரண்டு முலாம்பழம் 50 ரூபாய் என்றால் மூன்று தாருங்களேன் என்று கடைக்காரரிடம் வம்பிற்கு நிற்போம். ஆனால் அங்கு 18 லட்சத்திற்கும் மேல் விற்பனையானது, அதுவும் இரண்டு முலாம்பழங்கள் மட்டுமே என்பது ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.