இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 5 வது டெஸ்ட் போட்டியில் நாளை தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் இரண்டு முக்கிய வீரர்கள் நீக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இந்த 4 போட்டிகளில் இந்திய அணி 1 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இரண்டு போட்டிகளில் வென்று ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணி கடந்த போட்டியில் 2 ஸ்பின்னர் கலுடன் களமிறங்கியது. சிட்னி மைதானத்தில் ஸ்பின் பலன் கொடுக்கும் என்றாலும் கடைசி இரண்டு நாட்கள் மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை கூறிய நிலையில் 2 ஸ்பின்னர் தேவை இல்லை என வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட உள்ளதாகவும், வலைபயிர்சியின் போது ஆகாஷ் தீப் க்கு முதுகில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா விளையாட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரு மாற்றங்கல் 5 வது போட்டியில் இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.