சில நேரம் அடுப்பில் வைத்த பாத்திரம் கருகி சுத்தம் செய்ய முடியாத அளவிற்கு மாறிவிடும்.இந்த கறை படிந்த பாத்திரங்களை சுலபமாக சுத்தம் செய்ய எளிய வழிகள் இதோ.
தேவையான பொருட்கள்:-
1)சமையல் சோடா – இரண்டு தேக்கரண்டி
2)டிஷ் வாஷ் லிக்விட் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
கிண்ணம் ஒன்றில் இரண்டு தேக்கரண்டி சமையல் சோடா அதாவது சோடா உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு தேக்கரண்டி டிஷ் வாஷ் லிக்விட் ஊற்றி நன்றாக கலக்குங்கள்.பிறகு இதை கொண்டு கருகி போன பாத்திரத்தை தேய்த்தால் அழுக்குகள் நீங்கும்.
தேவையான பொருட்கள்:-
1)சோடா உப்பு – இரண்டு தேக்கரண்டி
2)எலுமிச்சை சாறு – மூன்று தேக்கரண்டி
3)இஞ்சி சாறு – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
முதலில் கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் இரண்டு தேக்கரண்டி சோடா உப்பை போட்டுக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு ஒரு எலுமிச்சம் பலத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை சோடா உப்பில் பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு ஒரு துண்டு இஞ்சை இடித்து சாறு சேர்த்து சோடா உப்பில் கலக்க வேண்டும்.நன்கு மிக்ஸ் செய்த பிறகு கருகிய பாத்திரத்தை தேய்க்க பயன்படுத்த வேண்டும்.இப்படி செய்தால் பாத்திரம் புதிது போன்று பளிச்சிடும்.
தேவையான பொருட்கள்:-
1)எலுமிச்சை தோல் பொடி – ஒரு தேக்கரண்டி
2)பேக்கிங் சோடா – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஒரு கைப்பிடி எலுமிச்சம் பழத்தை வெயிலில் நன்கு காயவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதை ஒரு டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் கிண்ணம் ஒன்றை எடுத்து அரைத்த எலுமிச்சை தோல் பொடியை போட்டுக் கொள்ளவும்.
பின்னர் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.அதன் பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும்.இந்த கலவையை கொண்டு பாத்திரம் தேய்த்தால் கறை,அழுக்கு அனைத்தும் நீங்கிவிடும்.