2 முறை பயன்படுத்தினால் போதும்!! வேண்டாம் வேண்டான்னு சொன்னாலும் முடி வளர்வது நிக்காது!!
இக்காலகட்டத்தில் முடி உதிர்வு பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. முதல் காரணம் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் முடிவு உதிர்வு ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியான மன அழுத்தம், முடிகளுக்கு அதிக பராமரிப்பு இல்லாமல் இருப்பது மற்றும் மரபணு காரணத்தாலும் முடி உதிர்வு அதிகமாக ஏற்படுகிறது. தினமும் காலையில் சீப்பால் முடியை சீவும் போது அதிக முடி உதிர்வு ஏற்படுகிறது. இதனால் பெண்களுக்கு முடி அடர்த்தி குறைந்தும், ஆண்களுக்கு வழுக்கை போன்றவைகள் ஏற்படுகிறது. இவைகளை உடனடியாக கவனிக்க வேண்டும் ஏனென்றால் சில சமயங்களில் உடலிலுள்ள பிரச்சனை காரணமாகவும் முடி உதிர்வு ஏற்படுகிறது.
தினமும் 50 முதல் 60 வரை முடிவுகள் கொட்டுவது இயல்பான ஒன்றாகும். முடி வளர்ந்து தானாக உதிர்வது இயல்பான ஒன்றாகும். இதில் மூன்று நிலைகள் ஆனாஜென், கெடாஜென் மற்றும் டேலோஜன் போன்றவைகள் உள்ளது. ஆனாஜென் முடி வளரும் நிலை, கெடாஜென் முடி மேற்கொண்டு வளராது, டேலோஜன் முடி உதிர்வு ஏற்படுகிறது.
ஒரு நாளுக்கு நூறுக்கும் மேல் முடி உதிர்வு ஏற்பட்டால் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயமாகும்.
முடி உதிர்வு அறிகுறிகள்
சிலருக்கு உடல் எடை குறைந்தால் முடி உதிர்வது வழக்கமாக இருக்கும். ஊட்டச்சத்து குறைபாடினாலும் முடி கொட்டும் மற்றும் டயபடிஸ் ஜான்டிஷ் போன்ற நோய்கள் காரணமாக முடி உதிர்வு ஏற்படுகிறது.
மேலும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உண்பதால் வேகமாகவும் அடர்த்தியாகவும் முடி வளர்கிறது.
தேவைப்படும் பொருட்கள்
கருவேப்பிலை
50 கிராம் பச்சை பயிறு
20 கிராம் கருஞ்சீரகம்
20 கிராம் வெந்தயம்
அரிசி ஊற வைத்த தண்ணீர்
செய்முறை
நன்றாக காய வைத்த கருவேப்பிலையை எடுத்துக்கொண்டு அதனுடன் பச்சை பயிறு, கருஞ்சீரகம், வெந்தயம் இவைகளை ஒன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அதனை பவுடர் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். அதிலிருந்து இரண்டு ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனுடன் அரிசி ஊறவைத்த தண்ணீரை எடுத்து இரண்டையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இதனை காலையில் எழுந்து தலைக்கு தேய்த்து அரை மணி நேரம் கழித்து பிறகு தலைக்கு குளித்து வந்தால் முடி கொட்டும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும். இதனை வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் போதும் முடி கருமையாக காடு போல வேகமாக வளரும்.