#Coimbatore: கோவை மாவட்டத்தில் ஹெல்மட் அணியாமல் செல்லும் படிக்கும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு புதிய விதிமுறையை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
விபத்துகளால் உயிர் சேதமாவது சமீபத்தில் அதிகரித்துவிட்டது. இதை கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் பல கட்டுப்பாட்டு நெறிமுறைகளை விதித்தாலும் எதுவும் குறைந்த பாடில்லை. அந்த வகையில் சென்னை கோயம்பத்தூர் அனைத்து மாவட்டங்களில் தினசரி பாதிப்பானது முன்பை விட அதிகரித்துள்ளது. இவை இரண்டும் தொழில் ரீதியாக வளர்ந்து வரும் பெரிய மாவட்டம்.
இதில் போக்குவரத்து நெரிசல் என்பது சற்று அதிகம் தான். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் அதிகளவு விபத்துக்கள் நடப்பதாகவும் குறிப்பாக இதில் இளம் வயதினர் எண்ணிக்கை அதிகம் என தெரியவந்துள்ளது. இதனை வரும் நாட்களில் தடுக்கும் விதமாக காவல் ஆய்வாளர் புதிய அறிவிப் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இனி தலை கவசம் அணியாமல் கோவை மாநகரில் இருசக்கர வாகனத்தில் எந்த ஒரு மாணவர் மற்றும் மாணவிகள் சென்றாலும் கட்டாயம் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தத்தோடு அபராதம் வசூல் செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இது மாணவர்களுக்கு மட்டுமின்றி தலைமை பேராசிரியர்கள் என அனைவருக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளார். இந்த , “No helmet No entry” விதிமுறையானது தற்பொழுது கோவை மாநகரில் புதியதாக அறிமுகமாகியுள்ளது.