அனைத்து பள்ளிகளிலும் 20 நிமிடம் பிரேக் மாணவர்களுக்கு குட் நியூஸ் !! பள்ளிகல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!   

Photo of author

By Jeevitha

அனைத்து பள்ளிகளிலும் 20 நிமிடம் பிரேக் மாணவர்களுக்கு குட் நியூ!! பள்ளிகல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!

அனைத்து  மாநில அரசுகளும்  பள்ளி மாணவர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கும் பல நலத்திட்ட உதவிகளை  செயல்படுத்தி வருகிறது. மேலும் மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் , புத்தகம், நோட்டு போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் படிக்கும் 6 ஆம் வகுப்பு முதல்  9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தமிழக அரசு அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ள்ளது.

மேலும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு  பயோ மெட்ரிக் முறையை பள்ளிகளில் அறிமுகபடுத்தி உள்ளது.  எனவே, ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு விரைவாக பாடத்திட்டங்களை முடிக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது.

இந்த நிலையில் இன்று தஞ்சாவூரில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அபில் மகேஷ் சந்தித்தார். மேலும் சந்திப்பில் பேசிய இவர் இன்று ஆசிரியர்கள் சங்கம் சார்பாக கோரிக்கை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

இது குறித்து நிதி அமைச்சர் , முதல்வர், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் , ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உடன் கலந்து பேச உள்ளதாக கூறினார். மேலும் தற்போது தமிழக பள்ளிகளில் முதல்வர் அறிவுறுத்தலின் படி, அனைத்து பள்ளிகளிலும் 20 நிமிடம் நுலகத்திற்கு மாணவர்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் பள்ளி சார்ந்த தமிழ் மன்றங்கள், பிற மன்றங்கள், கவிதை போட்டிகள், மாநில அளவில் பரிசுகளை பெரும் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.