செந்தில் பாலாஜியை கைது செய்தது சரியானதே!! அதிரடி தீர்ப்பு வழங்கிய  ஐகோர்ட்!! 

0
40
What is the current status of Senthil Balaji in jail?? Information released!!
What is the current status of Senthil Balaji in jail?? Information released!!

செந்தில் பாலாஜியை கைது செய்தது சரியானதே!! அதிரடி தீர்ப்பு வழங்கிய  ஐகோர்ட்!! 

அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டப்படி சரியானது என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது ஏராளமானோர்க்கு வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணம் பரிமாற்ற தடைச்  சட்ட வழக்கில் அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதனால் அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து அந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி. கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.

அடுத்ததாக  இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு கடந்த 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில் அவர் முன்னிலையில் கடந்த மூன்று நாட்கள் தீவிர விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இன்று அதற்கான தீர்ப்பை அளித்தார். அதன் விவரம் வருமாறு,

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் விசாரணைக்கு எந்தவித தடையும் கோர முடியாது.  விசாரணைக்கு உரிய முறையில் ஒத்துழைக்க வேண்டும். தான் குற்றம் செய்யவில்லை என்பதை செந்தில் பாலாஜி விசாரணை நீதிமன்றத்தில் முறையாக நிரூபிக்க வேண்டும். தற்போது செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர் தான்.

கைது செய்யப்பட்டவர்களை விசாரணை அதிகாரிகள் விசாரணை காவலில் எடுக்க வேண்டியது அவசியம். என்று பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்தார் மூன்றாவது நீதிபதியான சி.வி. கார்த்திகேயன்.

மேலும் அவர் அமலாக்கத்துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் கைது செய்துள்ளது. எனவே  செந்தில் பாலாஜியின் சிகிச்சை நாட்களை அமலாக்க துறையின் காவல் நாட்களாக எடுத்துக் கொள்ள முடியாது. அதனால்  அவரின் சிகிச்சை முடிந்ததும் மீண்டும் அமலாக்கத்துறை காவலில் எடுத்து முறையான விசாரணையை தொடங்கலாம் என்று நீதிபதி கூறியுள்ளார்.