மாணவர் சேர்க்கை 20 சதவீதம் அதிகரிப்பு ! கல்லூரிக் கல்வி இயக்ககம் தகவல் !!

Photo of author

By Parthipan K

மாணவர் சேர்க்கை 20 சதவீதம் கூடுதல் ! கல்லூரிக் கல்வி இயக்ககம் தகவல் !!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு சார்பில் தொடர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. இருப்பினும் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.த

தற்போதுபன்னிரண்டாம் வகுப்பு முடித்து, தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. இதற்கான சான்றிதழ் பதிவேற்றம் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வழக்கத்தை விட இந்த ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீத மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கல்லூரிகளில் கல்வி இயக்ககம் கூறியுள்ளது.

மேலும் கூடுதலாக மாணவர்கள் சேர்க்கைக்கு, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறவும் கல்லூரி நிர்வாகத்திற்கு கல்லூரி கல்வி இயக்ககம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதேசமயம், இந்த ஆண்டிற்கான
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வழக்கத்தை விட குறைவாக இருப்பதாகவும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மட்டுமே அதிக அளவில் மாணவர்கள் சேர விண்ணப்பித்துள்ளார்கள் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.