போக்குவரத்து ஊழியர்கள் சம்பள கணக்கிலிருந்து 200 கோடி அபேஸ்.. கண்டுகொள்ளாத அதிகாரி!! குமுறும் தொழிலாளர்கள்!!

போக்குவரத்து ஊழியர்கள் சம்பள கணக்கிலிருந்து 200 கோடி அபேஸ்.. கண்டுகொள்ளாத அதிகாரி!! குமுறும் தொழிலாளர்கள்!!

போக்குவரத்து ஊழியர்களுக்கும் தமிழக அரசுக்கும் சம்பளம் குறித்த பிரச்சனையானது அவ்வபோது காணப்படும். அந்த வகையில் மாநகர போக்குவரத்தின் கீழ் பணி செய்யும் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து மாதம்தோறும் எல்ஐசி காப்பீட்டு தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட 15 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரியும் நிலையில் மாதந்தோறும் இவர்களது சம்பள கணக்கில் இருந்து 2500 ரூபாய் வீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.

ஆனால் சமீப காலமாக இந்த பிடித்தம் செய்யப்படும் பணமானது எல்ஐசிக்கு கட்டப்படுவதில்லை. இது குறித்து புகாரை தற்பொழுது சென்னை மாநகர போக்குவரத்து கீழ் பணிபுரியும் துளசிதாஸ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தனது சம்பள கணக்கிலிருந்து  மாதந்தோறும் 2500 என்ற வீதம் ஆறு மாதம் 15 ஆயிரம் வரை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அத்தொகையை போக்குவரத்து கழகமானது எல்ஐசிக்கு கட்டப்படவில்லை.

இதனை தனது சொந்த காரணத்திற்காக பண பட்டுவாடா அதிகாரி பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு எல்ஐசி க்கு பணம் காட்டப்படாதது குறித்து நோட்டீஸானது எல்ஐசியிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அந்த பணம் வேறு யாருக்காவது செல்கிறதா என்பது குறித்து எனது மனைவி சந்தேகிக்கிறார். மேற்கொண்டு வீட்டில் நிம்மதி இல்லாத சூழல் ஏற்படுகிறது. இந்த பிடித்தம் தொகையானது முறையாக செலுத்தப்படவில்லை என்ற புகார் எனக்கு மட்டுமின்றி என்னைப் போல் 15,000 தொழிலாளர்களுக்கும் உள்ளது.

கிட்டத்தட்ட 200 கோடி பணமானது மோசடி செய்யப்பட்ட நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு இதற்குரிய அதிகாரியிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.எங்கள் சம்பள கணக்கிலிருந்து பிடிக்கும் பணத்தை முறையாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். மேற்கொண்டு போலீசார் விசாரணை செய்ததில், இது குறித்த எந்த ஒரு ஆதாரத்தன்மையான தரவுகளும் புகார் சுமக்கும் நபர் மீதிருந்து கிடைக்கப்படவில்லை. மேற்கொண்டு தரவுகள் ஏதேனும் கிடைத்து உறுதியாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.