இந்திய சினிமாவில் ஓடிடி உரிமத்திற்கு 200 கோடி ரூபாய் சாதனை!! படக்குழு அதிரடி அறிவிப்பு!!

0
122
200 crore rupees record for OTD license in Indian cinema!! Film crew action announcement!!
200 crore rupees record for OTD license in Indian cinema!! Film crew action announcement!!

இந்திய சினிமாவில் ஓடிடி உரிமத்திற்கு 200 கோடி ரூபாய் சாதனை!! படக்குழு அதிரடி அறிவிப்பு!!

இந்தியன் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும் . இந்த படத்தை  பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பல நடிகர்களும் நடித்திருந்தார்கள்.

இந்த படம் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில்,  ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளியிட்டது. இத்திரைப்படம் பல படங்களின் வசூல் சாதனையை முறியடித்தது. இந்நிலையில் இந்தியன் 2 தயாரிப்பதாக  கடந்த செப்டம்பர்  2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதன் முதல் படப்பிடிப்பு ஜனவரி 2019 ஆம் ஆண்டு தொடங்கியது.

மேலும் பிப்ரவரி 2020 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டது இதனால் பாதியில் படப்பிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பு நடைபெறு வந்தது. இந்த இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பரீத் சிங், பிரியா பவானி சங்கர் போன்ற பிரபல நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

படப்பிடிப்பு இறுதிகட்டத்தை  சென்னை விமானம் நிலையத்தில் நடைபெற்றது. மேலும் படம் குறித்து படக்குழு அடிக்கடி அப்டேட்களை வெளியிட்டு வந்தது. தற்போது இயக்குனர் சங்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் தொழில்நுட்பம் குறித்து பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

அந்த பதிவில் scanning the advanced technology lola vfx la என்று ட்விட் செய்திருந்தார். மேலும் இந்த படத்தில் பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிறு வயது கமலை இந்தியன் 2 படத்தில் காணலாம் என்றும் தகவல் வெளியாகியது. மேலும் ஹாலிவுட் படத்தின் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று படக்குழு அறிவித்திருந்தது.

மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குளில் வெளியாகும் என்று தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் இதன் ஓடிடி உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 200 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய சினிமாவில் ஓடிடிக்கு அதிக விலையிற்கு விற்கப்பட்ட முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபோக்குவரத்துக் கழகத்தில் பணி நியமனம்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!!
Next articleரேஷன் அட்டைதாரர்களுக்கு தொகுப்பு குறைக்க திட்டம்!! வெளியான அதிர்ச்சி தகவல்!!