திரும்பப் பெறும் 2000 ரூபாய் நோட்டு! இதை மாற்றுவதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை!!

Photo of author

By Sakthi

திரும்பப் பெறும் 2000 ரூபாய் நோட்டு! இதை மாற்றுவதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை!!

Sakthi

Updated on:

திரும்பப் பெறும் 2000 ரூபாய் நோட்டு! இதை மாற்றுவதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை!
மக்கள் தங்கள் கைவசம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள எந்த ஒரு ஆவணமும் கொடுக்கத் தேவையில்லை என்று பாரத் ஸ்டேட் வங்கி  அறிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. மக்கள் தஙக்ளிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் எனவும் அதுவரை 2000 ரூபாய் நோட்டு செல்லுபடியாகும் எனவும் தெரிவித்தது. இதை கண்டித்து பல அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.
தற்போது பாரத் ஸ்டேட் வங்கி மக்கள் தங்கள் கைவசம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்தவொரு ஆவணத்தையும் வங்கிகளுக்கு கொடுக்க தேவையில்லை என்று அறிவித்துள்ளது.
அதாவது 2000 ருபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மக்கள் எந்த ஒரு படிவத்தையும் நிரப்பவோ அடையாள ஆவணம் தரவோ தேவையில்லை என்று பாரத் ஸ்டேட் வங்கி தற்பொழுது அறிவித்துள்ளது.