பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படும்!! பயணிகளுக்கான அறிவிப்பு!!
கடந்த 19ம் தேதி, செப்டம்பர் 30 ம் தேதிக்கு பிறகு 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது எனவும், 2000 ரூபாய் நோட்டுக்கள் வைத்து இருப்பவர்கள் நாளை முதல் அதாவது மே 23ம் தேதி முதல் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதில் ஒரு நாளைக்கு, ஒருவர் ரூ.20000 வரை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில், பொது மக்களிடம் இருந்து 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்க வேண்டாம் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் நடத்துனர்களுக்கு அறிவித்துள்ளது. அதாவது, தற்போது 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
ஒரு நாளைக்கு ரூ. 20000 வரை மட்டுமே மாற்ற இயலும் என்பதால் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தால் வங்கியில் செலுத்த முடியாத சூழ்நிலை உள்ளதால் பொது மக்களிடம் 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்கலாம் என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து பயணம் மேற்கொள்ளலாம்.