அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்பட மாட்டாது!! போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!

0
268
2000 rupees notes will not be accepted in government buses!! Transport Corporation Notice!!
2000 rupees notes will not be accepted in government buses!! Transport Corporation Notice!!

அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்பட மாட்டாது!! போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!

கடந்த 2016ம் வருடம் அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்து புதிய 500, 200, 100 ரூபாய் நோட்டுக்கள் மற்றும்  2000 ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்தியது. கிட்டத்தட்ட 6 வருடங்களாக புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை தற்போது திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கடந்த 19ம் தேதி, செப்டம்பர் 30 ம் தேதிக்கு பிறகு 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது எனவும், 2000 ரூபாய் நோட்டுக்கள் வைத்து இருப்பவர்கள் நாளை முதல் அதாவது மே 23ம் தேதி முதல் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதில் ஒரு நாளைக்கு, ஒருவர் ரூ.20000 வரை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில், பொது மக்களிடம் இருந்து 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்க வேண்டாம் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் நடத்துனர்களுக்கு அறிவித்துள்ளது. இதை பற்றி போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியது. தற்போது 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஒரு நாளைக்கு ரூ. 20000  வரை மட்டுமே மாற்ற இயலும் என்பதால் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தால் வங்கியில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் நடத்துனர்கள், பொது மக்கள் 2000 ருபாய் நோட்டுக்களை கொடுத்தாலும் அவர்களிடம் பக்குவமாக பேசி அந்த ரூபாய் நோட்டுக்களை வாங்க வேண்டாம் என போக்குவரத்து கழகம் கூறியுள்ளது.

Previous articleபூங்கொத்துகள் சால்வைகள் இனி கூடாது! கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு!!
Next articleவித்தியாசமான முறையில் இந்திய பிரதமருக்கு வரவேற்பு! பப்புவா நியூ கினியா பிரதமர் செய்த செயல்!!