உஷாராக இருக்க வேண்டிய 4 ராசிக்காரர்கள் !!! 2020 புத்தாண்டு ராசி பலன்

Photo of author

By Parthipan K

உஷாராக இருக்க வேண்டிய 4 ராசிக்காரர்கள் !!! 2020 புத்தாண்டு ராசி பலன்

அறிவியல் ரீதியாக பல்வேறு பரிணாம வளர்ச்சிகளை மனிதயினம் அடைந்திருந்தாலும், இன்னமும் ஒரு சில விஷயங்களில் ஒவ்வொரு மனிதனின் எண்ண ஓட்டமும், குறிப்பாக எதிர்பார்ப்பு ரீதியாக பெரிய மாற்றங்களை அடையவில்லை என்று தான் கூறவேண்டும்.

ஒவ்வொரு நாளும், நமக்கு நல்லதாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாத மனிதன் இருக்கவே முடியாது, ஒரு நாளுக்கே இந்த எதிர்பார்ப்பு என்றால் புது வருடம் என்றால் சொல்லவே தேவையில்லை.

புத்தாண்டு பிறக்கயிருக்கும் நிலையில் அனைவரின் மனதிலும் எழும் மிகப்பெரிய கேள்வி, வரும் ஆண்டு நமக்கு எப்படி இருக்கும் ? 

2020 ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சனிபகவான் தனுசு ராசியில் இருந்து ஆண்டின் முதலில் ஜனவரி 24ஆம் தேதி மகரம் ராசிக்கு நகர்கிறார். மிதுனத்தில் உள்ள ராகு 18.09.2020 அன்று இரவு 8.45 மணி ரிஷப ராசிக்கு நகர்கிறார். தனுசு ராசியில் உள்ள கேது விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குருபகவான் தனுசு ராசியில் இருக்கிறார். 2020 மார்ச் 30ஆம் தேதியன்று மகர ராசிக்கு செல்கிறார். ஜூன் 30ஆம் தேதிவரை மகர ராசியில் சஞ்சரிப்பார். பின்னர் வக்ரமடைந்து தனுசு ராசிக்கு வரும் குருபகவான் நவம்பர் வரை தனுசு ராசியில் சஞ்சரிப்பார்.

இந்த கிரஹ மாற்றங்கள் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு வகையான பலன்களை தர இருக்கிறது. மற்ற ராசிக்கார்களை காட்டிலும் பின்வரும் இந்த  4 ராசிக்காரர்கள் சற்றே கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

ரிஷபம்:

ஆண்டின் துவக்கத்தில் ஏற்படும் சிரமங்களை பொறுத்துக் கொள்ளுங்கள். செலவுகள் அதிகரிக்கும், சிக்கனம் தேவை. நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியடையலாம், தீவிர முயற்சியின் காரணமாக வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போவது நல்லது. ஆனால் மார்ச் மாதத்திற்கு பிறகு நிலைமைமாறும். மார்ச் 27 முதல் ஜூலை 7’ம் தேதி வரை, பொருளாதார வளம் மேம்படும். தொழிலதிபர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும், வெளியிழந்த ஐ.டி துறையினருக்கு மீண்டும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும், கலை துறையினருக்கு புகழ், பாராட்டுகள் கிடைக்கும்,புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும், மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பரிகாரங்கள்: சனிக்கிழமைகளில் ஆஞ்சிநேயருக்கு நெய் தீபம் ஏற்றலாம்.

கன்னி:

சுக்கிரன் சாதகமாக இருக்கும் நிலையில் புத்தாண்டு மலர்கிறது. ஆண்டின் துவக்கத்தில் வீண் அலைச்சல் இருக்கும், கணவன் மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது.  குடும்பத்தில் பிரச்சனைகள் தலைதூக்கும். மதிப்பு மரியாதை சுமாராக இருக்கும். குருபகவானால் மன உளைச்சல் ஏற்பட்டு அகலும். நீங்கள் சிந்தித்து செயல்பட்டாள், சிகரத்தை கூட எட்டி பிடிக்கலாம். உங்களுக்கு  மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை அனுகூலமான சூழல் உருவாகும். செயலில் வெற்றிகிட்டும், மனநிம்மதி ஏற்படும். குருபலத்தால் தங்கம்,வெள்ளி,வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் வளர்ச்சிப்பாதையில் வெற்றி நடை போடுவர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். அரசியல்வாதிகள், வாழ்வில் மேன்மை அடைவர்,விரும்பிய பதவியும் ஆதாயமும் கிடைக்க பெறுவர். பெண்களுக்கு  கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்,உங்களால் குடும்பம் முன்னேற்ற பாதையில் செல்லும். 

பரிகாரங்கள்: சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலையிட்டு வழிபடலாம்.

தனுசு:

உங்கள் ராசிக்கு நட்பு கிரகமான சுக்கிரன் சாதகமாக இருக்கும்நிலையில் புத்தாண்டு பிறக்கிறது. ஆகஸ்ட் 31’க்கு பிறகு ராகு சாதகமான இடத்திற்கு வருகிறார். அதுவரை எதிலும் பொறுமையைக் கடைபிடியுங்கள். தொழிலதிபர்களுக்கு பகைவர் இடையூறு அவ்வப்போது தலைதூக்கலாம்.  யாருடனும் விழிப்புணர்வுடன் பழகுவது  நல்லது. வியாபாரிகள், புதிய வியாபாரம் துவங்குவதை தவிர்க்கவும்.கலைஞர்களுக்கு விடாமுயற்சி இருந்தால் மட்டுமே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். திருமணம் போன்ற சுபவிஷயத்தில் தாமதம் ஏற்படும். மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை உங்களுக்கு அனுகூலமான காலகட்டம். மனதில் உற்சாகம் பிறக்கும், நினைத்ததை உற்சாகமாக செய்து முடிக்கலாம். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

பரிகாரங்கள்: சனிக்கிழமைகளில் நவகிரஹத்திற்கு அர்ச்சனை செய்து வழிபட வும்.

மகரம்:

ஆண்டின் முற்பகுதியில் ராகுவும் பின்னர் கேதுவும் நற்பலன் தர காத்திருக்கின்றனர். எனினும் குரு சாதகமற்ற நிலையில் இருப்பதால் வீண் விவாதங்களை தவிர்க்கவும்,அவ்வப்போது மனக்குழப்பம் ஏற்படும். சந்தோசத்தை எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டாலும் கூட அதை முழுமையாக அனுபவிக்க முட்டியாமல் போகலாம். ஆகஸ்ட் 31’க்கு பிறகு பொருளாதார நிலை மேம்படும் தடைகள் விலகும்,பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு ராகுவால் நன்மை உண்டாகும்.வியாபாரிகளுக்கு லாபம் படிப்படியாக அதிகரிக்கும். கலைஞர்கள் ரசிகர்களின் மத்தியில் புகழையும் பாராட்டையும் பெறலாம். பெண்கள் ஆண்டின் துவக்கத்தில் குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும், மார்ச் 27’ க்கு பிறகு  குருவின் பார்வையால் நன்மையை எதிர்பார்க்கலாம். பொன் பொருள் சேர்க்கை இருக்கும், குருபகவானின் ஒன்பதாவது இடத்துப் பார்வையால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார்.

 பரிகாரங்கள்: வியாழன் குருபகவான் வழிபாடு.