தமிழகத்திலேயே விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்புமனு தாக்கல் தேர்தல் பிரச்சாரம் என்று மிகவும் பிசியாக இருக்கிறார்கள். இதனால் தமிழகமே மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.சென்ற மாதம் தமிழகத்திற்கான தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். அதனைத்தொடர்ந்து சென்ற 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார்கள். அதன் பிறகு சென்ற 19ஆம் தேதி மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வேட்புமனு பரிசீலனை தொடங்கியது. இதில் 234 தொகுதிகளிலும் ஆயிரத்து 605 பெண் வேட்பாளர்களும் மூன்று மூன்றாம் பாலினத்தவர்கள் அதேபோல 6183 ஆண் வேட்பாளர்களும் என்று மொத்தமாக 7 ஆயிரத்து 255 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்கள்.அந்த 7255 வேட்பு மனுக்களை பரிசீலனை செய்ய தொடங்கியதில் 2716 வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது.
அதேபோல மீதம் இருக்கின்ற 6 ஆயிரத்து 492 வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசியல் கட்சிகளின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரு தொகுதிக்கும் மேலான வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார்கள். அவர்களுடைய ஒரு வேட்பு மனு ஏற்கப்பட்ட உடன் கூடுதலாக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல மாற்று வேட்பாளர்கள் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், மார்ச் மாதம் 22ஆம் தேதியான இன்று வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தலில் போட்டியிட விருப்பம் இருக்கின்றவர்கள் தங்களுடைய மனுக்களை திரும்ப பெற்றுக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அவகாச காலம் முடிந்த பிறகு இன்று மாலை வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியாகும் இதற்கு முன்னதாக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும் என்று தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.