2021 உலகளாவிய ஊழல் குறியீடு: முன்னேற்றம் கண்ட இந்தியா!

Photo of author

By Vijay

2021 உலகளாவிய ஊழல் குறியீடு: முன்னேற்றம் கண்ட இந்தியா!

Vijay

2021 ஆம் ஆண்டுக்கான, உலகளாவிய ஊழல் குறியீட்டில் இந்தியா சிறிது முன்னேற்றம் கண்டுள்ளது.

ஜெர்மனியில் உள்ள பெர்லினை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய ஊழல் குறியீடு பட்டியலை வெளியிட்டு வருகிறது.அதனடிப்படையில், 2021 ஆம் ஆண்டுக்கான ஊழல் குறியீட்டு பட்டியலை நேற்று வெளியிட்டது.

லஞ்சம், பொது நிதியை திசை திருப்புதல், விளைவுகளை சந்திக்காமல் அதிகாரிகள் தங்கள் அரசு அலுவலகத்தை தனிப்பட்ட லாபத்திற்காக பயன்படுத்துவது, நிர்வாகத்தில் வாரிசுகளை நியமிப்பது, லஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகளை புகார் அளிக்கும் நபர்களுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை மையமாகக்கொண்டு 0 முதல் 100 வரையிலான மதிப்பெண் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்படும்.

0 மதிப்பெண் என்பது அதிக ஊழல் மிக்கது எனவும், 100 மதிப்பெண் என்பது ஊழலற்ற நிலையை குறிப்பிடுவதாகும் இருக்கிறது. 180 நாடுகளை உள்ளடக்கிய 2021 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஊழல் குறியீடு பட்டியலில், 40 மதிப்பெண்களுடன் இந்தியா 85வது இடத்தைப் பிடித்துள்ளது. 86வது இடத்தில் இருந்த இந்தியா ஒரு இடம் முன்னேறியிருப்பது கவனிக்கத்தக்கது.

சுவிச்சர்லாந்து, நெதர்லாந்து, லக்சம்பேர்க், ஜெர்மனி போன்ற நாடுகள் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளன. இங்கிலாந்து 11வது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஹாங்காங் 76 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது .அமெரிக்கா 27வது இடத்தை பிடித்தது.