உக்ரைன் நெருக்கடி; ரஷ்யா தாக்கினால் புதின் மீது பொருளாதார தடை விதிக்கலாம்- ஜோ பிடன்

0
84

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் மீது தனிப்பட்ட பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா ஆலோசிக்கும் என்று அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் செயல்பாடு, உலக நாடுகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார். அதேசமயம், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் தனக்கு இல்லை என ரஷ்யா கூறிவருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பிற மேற்கு நாடுகள் பதற்றத்தை அதிகரித்து வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைன் -ரஷ்ய எல்லையில், சுமார் 1 லட்சம் ரஷ்ய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பேட்டியளித்துள்ளார். ரஷ்ய அதிபர் மீது தனிப்பட்ட தடைகளை விதிக்க முடியுமா என ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, ஜோ பிடன் ஆம் என்று பதிலளித்தார்.

அதேசமயம் ,உக்ரைனுக்கு அமெரிக்க துருப்புகளை அனுப்பும் திட்டம் குறித்து தற்போதைக்கு சாத்தியக்கூறு இல்லை என்று கூறியுள்ளார்.