2025 ஐபிஎல்: சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்.. தல தோனி ஓய்வு குறித்து அசத்தல் முடிவு!! 

0
244
2025 IPL: Huge treat for CSK fans.. Crazy decision on Thala Dhoni's retirement!!
2025 IPL: Huge treat for CSK fans.. Crazy decision on Thala Dhoni's retirement!!

2025 ஐபிஎல்: சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்.. தல தோனி ஓய்வு குறித்து அசத்தல் முடிவு!!

ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் பல போட்டிகள் இருந்தது. அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ், தோனியின் இதுதான் இறுதி மேட்ச் என தகவல்கள் வெளியானது. அவருடைய ஹேர் ஸ்டைல் முதல் அனைத்தையும் ஒப்பிட்டு ரசிகர்கள் பல சுவாரஸ்ய விமர்சனங்களை முன் வைத்தனர். இறுதியில் நடைபெற்ற ஆர்சிபி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோதல் தான் உச்சகட்டம்.

தோனி முதற்கட்டத்திலேயே விக்கட் எடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இறுதியில் குறைந்தபட்ச ரன் ரேட்டை எடுத்திருந்தால் கூட புள்ளி அட்டவணையின் அடிப்படையில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருக்க முடியும். இரண்டு பாலுக்கு 10 ரன்கள் இருந்த நிலையில் சிஎஸ்கே பின்னடைவையை சந்தித்தது. இதனால் ரசிகர்களின் நம்பிக்கை அனைத்தும் வீணடைந்தது.

தோனி இந்த போட்டி முடிவடைந்ததும் இதிலிருந்து ஓய்வு பெற போகிறார் என்பது குறித்து தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தோனி அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியேறுவது குறித்து தற்பொழுது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை, இரு மாதங்கள் இது குறித்து கால அவகாசம் எடுத்துக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த கால அவகாசம் எதுக்காக எடுத்துக் கொள்கிறார் என்பது குறித்து பல தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதாவது கிரிக்கெட் தொடரில் 11 பிளேயர்கள் போட்டியில் பங்கேற்கும் பட்சத்தில் 12 வது நபராக ஒருவரை மேட்ச்சின் சூழலுக்கு ஏற்ப களம் இறக்க செய்யலாம் என்ற பிசிசிஐ விதி ஒன்று உள்ளது. இதற்கு கிரிக்கெட்டில் இம்பாக்ட் பிளேயர் என்று கூறுவர். இந்த இம்பாக்ட் பிளேயர் விதியானது ரத்து செய்யப்பட வேண்டுமென்று மூத்த வீரர்கள் பலர் பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதன் முடிவை இரண்டு மாதங்களில் பிசிசிஐ தெரிவிக்க உள்ளதாக கூறியுள்ளது.

மேற்கொண்டு இந்த விதியானது தொடரும் பட்சத்தில் தோனி அவர்கள் இம்பாக்ட் வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விதி ரத்து செய்யப்படும் பட்சத்தில் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வெடுக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.