அரசு தேர்வுகளுக்கு 2025 தான் சரியான வருடம்!! இதை விட்டுட்டா ரொம்ப வருத்தப்படுவீங்க!!

Photo of author

By Gayathri

அரசு தேர்வுகளுக்கு 2025 தான் சரியான வருடம்!! இதை விட்டுட்டா ரொம்ப வருத்தப்படுவீங்க!!

Gayathri

2025-is-the-right-year-for-tnpsc-government-exams-you-will-regret-it-if-you-miss-it

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலை டிஎன்பிஎஸ்சி மற்றும் அரசு துறை சார்ந்த தேர்வுகள் எழுதுவதற்கு இந்த ஆண்டுதான் சரியான ஆண்டாக இருக்கும் என்றும் இதனை தவற விட்டு விட்டால் அடுத்த ஆண்டு அதாவது 2026 ஆம் ஆண்டு தேர்வுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் இந்த துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

அடுத்த வருடம் டிஎன்பிஎஸ்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அட்டவணையின் படி தேர்வுகள் நடப்பது மிகவும் கடினமானது என்றும் ஓரிரு தேர்வுகள் நடைபெற்றாலே அவை மிகப்பெரிய அதிசயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் தேர்வர்கள் இந்த வருடமே தங்களுடைய தேர்வில் வெற்றி பெறுவதற்கான முழு ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும் என்றும் வல்லுனர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டிற்கான தேர்வு அட்டவணை :-

✓ ஜூன் 15 – குரூப் 1
✓ ஜூலை 13 – குரூப் 4
✓ செப்டம்பர் 28 – குரூப் 2 & குரூப் 2A

டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவுரைகள் :-

✓ இந்த ஆண்டு திட்டம் மற்றும் அட்டவணை இரண்டும் தேர்வர்கள் தங்களை தேர்வுகளுக்கு தயார்படுத்திக் கொள்வதற்காக வெளியிடப்பட்டவை

✓ ஆண்ட திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுகள் மாற்றவும் அல்லது நீக்கவும் படலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது

✓ காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு அறிக்கையாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

✓ தேர்வர்களுக்கான பாடத்திட்டம் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது கொடுக்கப்பட்டுள்ள தேர்வு தேதிக்கு முன் வரை மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.