2026 விஜய்யுடன் களம் காணும் EPS எதிராளிகள்.. அனல் பறக்கப்போகும் தேர்தல் களம்!!

0
187
2026 EPS Opponents to fight with Vijay.. Election field to be heated!!
2026 EPS Opponents to fight with Vijay.. Election field to be heated!!

TVK AMMK: அதிமுகவிலிருந்து வெளியேறிய பிளவுபட்ட நிர்வாகிகள் அனைவரும் தற்சமயம் இணைந்துள்ளனர். அந்த வரிசையில் செங்கோட்டையன் டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் சேர்ந்து புதிய அணி உருவாகியது. ஆனால் எடப்பாடி கட்சியிலிருந்து நீக்கியவர்களை ஒருபோதும் இணைக்க முன்வரவில்லை. அதற்கு ஆதரவு தெரிவிப்பவர்களையும் கட்சியை விட்டு நீக்கி தான் வருகிறார். அந்த வகையில் ஒன்றுபட்ட அதிமுக வேண்டும் என செங்கோட்டையன் கூறி பத்து நாள் கெடு விதித்ததை அடுத்து மறுநாளே அவரையும் கட்சியிலிருந்து நீக்கினார்.

இதனால் உக்கட்சி மோதலானது தீவிரமடைந்தது. இதன் தொடர்ச்சியாக செங்கோட்டையன் டெல்லி சென்று அமித் ஷாவையும் சந்தித்து வந்துள்ளார். இதனிடையே செய்திடர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், வரும் தேர்தலில் கட்டாயம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தான் முத்திரை பதிக்கும், நாங்கள் எந்த கூட்டணியில் உள்ளமோ அதுதான் வெற்றியும் பெறும். எதிர்பாராத கூட்டணி அமையும் என்றெல்லாம் கூறினார்.

இவர் இவ்வாறு கூறுவதற்கு முக்கிய ஆகரணம் விஜய் தான் என்கின்றனர். புதிதாக கட்சி தொங்கினாலும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவரும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக கூறியுள்ளார். இதனால் இவருடன் இணைய அதிக வாய்ப்புள்ளது. ஆனால் மூத்த தலைவர்கள் தற்போது உள்ள புதுமுக அரசியல் தலைவர் கீழ் செயல்படுவரார்களா என்பது சந்தேகம் தான். மாறாக இரட்டை தலைமை போல கூட்டணி பேச்சுவார்த்தை அமைந்தால் அதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.

Previous articleத.வெ.க பொதுச்செயலளார் புஸ்ஸி ஆனந்த் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு.. விஜய் எடுத்த ஆக்ஷன்!!
Next articleபாஜக-வில் ஒருங்கிணையும் முக்கிய தலைவர்கள்!! ஈ.பி.ஸ்-க்கு  காத்திருக்கும் அதிர்ச்சி!!