தமிழக அரசு வழங்கும் ரூ.2080 கோடி மானியம்! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
பருவமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் வீடுகளில் வெள்ளம் போல் நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த மக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகிறது. அந்த வகையில், அவர்களுக்கு கொசு வலை வழங்கப்படுகிறது. இவ்வாறு சைதாப்பேட்டை தொகுதியில் விலை இல்லா கொசுவலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டார். மேற்கொண்டு அவர் பேசியதாவது, முன்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் 270,280 சதுர அடிகளிலேயே கட்டப்பட்ட வந்தது.
தற்பொழுது தமிழக அரசு ஒருவருக்கு 420 சதுர அடியில் குடியிருப்பானது கட்டித் தருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு குடியிருப்பிற்கும் தமிழக அரசு 10 லட்சம் வரை ஒதுக்குகிறது. இதில் 1.50 லட்சம் மட்டும் மத்திய அரசு வழங்குகிறது. மேலும் குடியிருப்பில் வசிப்பவர்கள் 1.50 லட்சத்தை தருகின்றனர். மத்திய அரசு மற்றும் குடியிருப்பு வாசிகள் தரும் பணத்தை அடுத்து தமிழக அரசு ரூ.10 லட்சத்தை முழுமையாக வழங்குகிறது.
கிட்டத்தட்ட 2,080 கோடி செலவில் தமிழகத்தில் 1.60 லட்சம் வீடுகள் நாளடைவில் கட்ட திட்டமிட்டு உள்ளனர். மேலும் உயிரிழந்த கால் பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா குறித்தும் பேசினார். உயிரிழந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா அவர்களுக்கு செய்த அறுவை சிகிச்சையில் எந்த ஒரு கோளாறும் இல்லை. ஆனால் ரத்தக் கசிவை கட்டுப்படுத்த போடப்பட்ட கட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் மாற்றம் செய்ய வேண்டும்.
மருத்துவர்கள் அலட்சியமாக இருந்து விட்ட காரணத்தினால் கட்டு இருக்கம் அடைந்து அதில் உள்ள திரவம் உடலில் பட்டு அனைத்து உறுப்புகளும் செயலிழக்க ஆரம்பித்துவிட்டது. பிரியாவின் உயிரிழப்பானது கொலை குற்றமாக கருதப்பட்டால் அதற்கான முடிவை சட்டம் தான் கூற வேண்டும். இதுபோல் எதிர்காலத்தில் அலட்சியப் போக்கு இல்லாமல் இருக்க அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டமானது நாளை மறுநாள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடக்க உள்ளது.