தமிழகம்: 2004-ம் ஆண்டு அன்று எழுந்த ஆழப்பேரலையில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோரின் உயிரையும் உடமைகளையும் ஈவு இரக்கமின்றி தனக்குள் வாரிசு உருட்டிக் கொண்டது. மேலும் மீள முடியாத பெரும் துயரத்தை 20 ஆண்டுகளாக மக்கள் சுமந்து வருகின்றனர். இந்தோனிசியா ஏற்பட்ட நிலநடுக்கம் ஒன்பது புள்ளி 1 முதல் 9. 3 ரிக்ட்டர் அளவிலான நிலநடுக்கத்தால் சுமார் 100 அடி உயரம் வரை எழுந்த சுனாமி பேரலைகள் நாடு நகரங்கள் என எந்த வித்தியாசமும் இன்றி சூறையாடினர்.
இந்தியா தாய்லாந்து இலங்கை உட்பட 14 நாடுகளில் சுமார் 2. 5 லட்சம் பேரின் உயிர்கள் கடலுக்கு இரையாகினார். தமிழ்நாட்டில் மட்டும் பத்தாயிரத்திற்கும் அதிகமான உயிரிழந்தனர். வரலாற்றில் இந்த கருப்பு நாள் நாகை உள்ளிட்ட கடற்கரையோர மாவட்டங்களில் ஆறாத வடுவாய் இருந்து வருகிறது. உறவுகளை இழந்தவர்கள் டிசம்பர் 26 ஆம் தேதியை துக்க நாளாக அனுசரித்து கடலுக்கு பால் ஊற்றியும் பூக்களை தூவையும் கண்ணீரால் மரியாதை செலுத்தி வருகின்றன.
ஒரு நாள் மட்டும் யாரும் கடலுக்குச் செல்வதில்லை மாலை வரை உண்ணாமல் இருந்து பிராத்தனை செய்தது வருகின்றனர். மேலும் பல தலைவர்கள் மற்றும் நாட்டில் உள்ள பல்வேறு பகுதியில் இருக்கும் மக்கள் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.