கேப்டனுக்கு 24 லட்சம்! வீரர்களுக்கு 6 லட்சம்! கொல்கத்தாவிற்கு விழுந்த அபராதம்!

0
186
#image_title
கேப்டனுக்கு 24 லட்சம்! வீரர்களுக்கு 6 லட்சம்! கொல்கத்தாவிற்கு விழுந்த அபராதம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று அதாவது மே 14ம் தேதி மோதின. இந்த போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்கு கொல்கத்தா அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட் செய்தது. முதலில் பந்துவீசிய கொல்கத்தா அணி பந்து வீசுவதற்கு கொடுக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மொத்தம் 90 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா அவர்களுக்கு 24 லட்சமும், மற்ற வீரர்களுக்கு தலா 6 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய  போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Previous articleபாலியல் தொழிலில் ஈடுபட்ட நடிகைகள்!! கையும் களவுமாக பிடித்த போலீசார்!!
Next articleராஜஸ்தான் தோல்வி குறித்து விராட் கோஹ்லி! நான் பந்து வீசியிருந்தால் RR அணி 40 ரன்களுக்கு ஆல் அவுட்!!