IPL 2025: ஒவ்வொரு முறை ஐபிஎல் தொடர் வரும்பொழுதும் இந்த முறை தோனி விலகிவிடுவார் என்ற செய்தி வலம் வருவதுண்டு. ஆனால் இம்முறை இதுதான் அவர் கடைசியாக விளையாடும் போட்டி என்று பலரும் கூறி வருகின்றனர். இது உண்மை தான் என உணர்த்தும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடுவதை அவரது பெற்றோர்கள் நேரடியாக பார்க்க வந்துள்ளனர். இதுபோல் முன்பு ஏதும் நடந்ததில்லை. கிட்டத்தட்ட தோனி 16 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார்.
அப்படி விளையாடும் போது ஒரு முறை கூட அவரது பெற்றோர்கள் நேரில் வந்து பார்த்ததில்லை. தற்பொழுது தான் முதல்முறையாக சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்து பார்த்துள்ளனர். இதனால் இனிவரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டேன் எனக் கூறி ஓய்வு அறிவிக்க போகிறாரா?? என்று கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. மேற்கொண்டு இந்த தகவலால் அவரது ரசிகர்கள் மிகுந்த வேதனையுடன் உள்ளனர்.
அதேபோல சில ஆண்டுகளுக்கு முன்பு தோனி ஒரு பேட்டியில், நான் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற போகிறேன் என்றால் கட்டாயம் சேப்பாக்கத்தில் தான் எனது கடைசி ஆட்டம் இருக்கும் என கூறியிருந்தார். அதேபோல அவரது பெற்றோர்களும் இம்முறை தான் வருகை புரிந்துள்ளனர். இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் இவர் ஓய்வு அறிவிப்பது கட்டாயம் எனக் கூறுகின்றனர். “தோனி ஓய்வை அறிவிக்காதீர்கள்” என்று இணையத்தில் ட்ரெண்டிங் போஸ்ட்போட்டு அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.