பிப்ரவரி 24ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை! அதற்கு பதில் சனிக்கிழமை வேலைநாள்!
கோவில் தேர் திருவிழா நடைபெறுவதை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி விடுமுறை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோயில் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமாகும். இக்கோவிலில் வருடந்தோறும் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். சிவனுக்கு பிடித்திருந்த பித்தை இத்தளத்தில் எழுந்தருளியிருக்கும் அங்காளம்மன் நீக்கியதாக வரலாறு. இதனால் இங்கு நடைபெறும் மயான கொள்ளை சிறப்பு வாய்ந்தது.
இதையடுத்து வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தேரோட்ட விழா நடைபெற இருக்கிறது. இதை அடுத்து அன்று ஒரு நாள் மட்டும் அனைத்து அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலமும், மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலகங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும். அன்றைய தினம் மாணவ-மாணவிகளுக்கு 24-ந்தேதி அன்று பள்ளி இறுதித் தேர்வுகள் நடைபெற தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின் அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம்போல் நடைபெறும்.
உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்ட 24-ந்தேதிக்கு பதிலாக 4.3.2023 (சனிக்கிழமை) அன்று அறிவிக்கப்பட்டுள்ள (சனிக்கிழமை) வேலைநாள் ஆகும். இந்த தகவலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்து உள்ளார்.