25.10.2020 சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் எது?

Photo of author

By Kowsalya

இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடவிருக்கிறோம். அந்த சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை செய்வதற்கு எந்த நேரம் உகந்தது என்பதை பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். இந்த நேரங்களில் நீங்கள் வழிபட்டு வந்தால் அதற்கு உண்டான நேர்மறையான பலன்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.

சரஸ்வதிபூஜை என்றாலே அது படிப்பு சம்பந்தப்பட்டதாக தான் இருக்கும். அதனால் குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை தங்கள் படிக்கும் புத்தகங்களுக்கு பூஜை செய்து பொட்டு வைப்பர். அப்படி செய்யும் பொழுது எந்த நேரத்தில் இதை செய்யலாம் என்பது தான் முக்கியம்.

குழந்தைகள் காலையில் புத்தகங்களுக்கு பூஜை செய்ய வேண்டுமெனில் காலையில் உகந்த நேரம் காலை 4.00 முதல் 5.00 மணி வரை. இல்லை குழந்தைகள் அந்த மணியளவில் எழுந்தரிக்க காலதாமதம் ஆகிறது என்றால் 7.00 – 10.00 மணிக்குள் அதனை செய்து விடலாம். இல்லையெனில் 11.00-12.00 மணிக்குள் செய்துவிட வேண்டும். இந்த பூஜையை காலையில் செய்து விடுவது மிகவும் நல்லது. அதனால்தான் இந்த மூன்று நேரங்களை பின்பற்றி பூஜைகளை முடித்து விடுங்கள்.

அடுத்து ஆயுத பூஜை செய்ய வேண்டிய காலம் காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை. அப்பொழுது சுக்கிரன் ஹோரை சந்திரன் ஹோரை புதன் ஹோரை மூன்றும் ஒன்றாக வருவதால் அப்பொழுது செய்வது மிகவும் நல்லது.

அப்படி மாலைதான் செய்ய வேண்டுமெனில் மாலையில் 3.00 முதல் 4.30 வரை நல்ல நேரம் வருவதால் அந்த நேரத்தில் செய்யலாம்.

அதை தவற விட்டால் 9 மணி முதல் 10 மணி வரை சுக்கிர ஹோரை வருவதால் அந்த நேரத்தில் செய்யலாம். அதை விட்டால் 10.00 மணி முதல் 11.00 மணி வரை சந்திரன் ஹோரை வருவதால் அந்த நேரத்தில் செய்யலாம். இது ஆயுதபூஜை நடத்தப்படுவதற்கான நல்ல நேரம் என்று கூறப்படுகிறது.

இதில் குறிப்பாக மதியம் 12.00 முதல் 1.30 மற்றும் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை , 6.00 மணி முதல் 7.30 வரை இந்த நேரங்களில் பூஜைகள் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது என்று கூறப்படுகிறது.

பூஜைகளை உகந்த நேரத்தில் செய்து பலன்களை பெறுங்கள். அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.