1 நாளில் 25 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு!! வரப்போகும் ஊரடங்கு.. அதிரடி  உத்தரவு போட்ட அரசு!! 

Photo of author

By Rupa

1 நாளில் 25 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு!! வரப்போகும் ஊரடங்கு.. அதிரடி  உத்தரவு போட்ட அரசு!!

கொரோனா தொற்று வைரஸானது 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு உலக நாடுகள் மத்தியில் மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்தது. அனைத்து நாடுகளிலும் மக்கள் கொத்து கொத்தாக உயிரிழக்க நேரிட்டது. ஆரம்பகட்ட காலத்தில் இந்த தொற்று பரவும் விதம் மற்றும் இதற்குரிய தடுப்பூசி என்று எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு ஏராளமான உயிர்களை இழந்தோம்.

நாளடைவில் சீரம் இன்ஸ்டியுட் ஆப் இந்தியா கோவிஷீல்டு தடுப்பூசியை கண்டுபிடித்தது. இதனைத்தொடர்ந்து கோவாக்சின் என்ற  தடுப்பூசியும் நடைமுறைக்கு வந்தது. இது அனைத்தும் 18 வயது கடந்த அனைவருக்கும் செலுத்தி வந்தனர். மேற்கொண்டு தொற்றானது சளி மற்றும் தும்பல் உள்ளிட்டவைகள் மூலம் பரவுவதால் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணியும் படியும் வலியுறுத்தினர். அதுமட்டுமின்றி பொதுமக்கள் எந்த ஒரு கூட்டமும் கூடாமலிருக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

நாளடைவில் இந்தத் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் பல நாடுகளில் 148 தடை சட்டம் அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு மாதக் கணக்கில் மக்கள் வீட்டினுள்ளேயே முடங்கிக் கிடந்தனர். அதுமட்டுமல்லாமல் பொருளாதார சூழலிலும் பின்னடைவை சந்திக்க நேரிட்டது. மக்கள் பழைய நிலைக்கு திரும்பவே இரண்டு வருடங்கள் ஆன நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றானது தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

அந்த வகையில் தற்பொழுது சிங்கப்பூரில் ஒரு நாளில் மட்டும் 25,000-க்கும்  மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்கொண்டு தொற்றானது அதிகளவில் மக்களை பாதிக்காமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தொற்று பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் ஊரடங்கு போடக்கூடும்.