தமிழ் சினிமாவில் படப்பிடிப்பு தொடங்கும் முன் 26 கோடி ரூபாய் வசூல்!!  ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்!! 

தமிழ் சினிமாவில் படப்பிடிப்பு தொடங்கும் முன் 26 கோடி ரூபாய் வசூல்!!  ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்!!

விஜய் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுனார். இவர் பல வெற்றி படத்தில் நடித்துள்ளார். மேலும் இவருக்கு  தமிழ்நாடு மட்டுமின்றி உலக  அளவிலும் ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.  இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகும் என்று படக்குழு முன்கூட்டியேஅறிவித்திருந்தது. இதனையடுத்து வெளிவரவிருக்கும் லியோ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது.

இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும்  இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் லியோ திரைப்படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகியது.

சில நாட்கள்  படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு முடிவடைந்தாக தெரிவித்திருந்தார்.  மேலும் இந்த படம் வெளி வருவதற்கு முன்பே 350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வருமானம் ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் போன்றவைகளில் அதிக வருவாய் ஈட்டியுள்ளது.

அதனையடுத்து தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். ஆனால் இந்த படப்பிடிப்பு இன்னும் தொடங்க வில்லை. இந்த நிலையில் அந்த படத்தின் ஆடியோ ரைட்ஸ் உரிமையை பிரபல நிறுவனம் வங்கியுள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் எந்த ஒரு படமும் விற்காத அதிகபட்ச விலைக்கு தளபதி 68 படத்தின் ஆடியோ ரைட்ஸ் 26 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. அதனையடுத்து இந்த படத்தில் விஜய் யுவன் கம்போ பாடல் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரசிகர்கள் இந்த படத்திற்கு ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.