27-1-2022- இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

0
187

மத்திய அரசின் கலால் வரி குறைப்பு காரணமாக, தீபாவளிக்கு பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 10 ரூபாயும் குறைத்த சூழ்நிலையில், சென்ற 84 தினங்களாக அவற்றின் விலை மாற்றப்படாமல் இருந்து வருகிறது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம்,இந்துஸ்தான் பெட்ரோலியம், உள்ளிட்ட நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன.

கச்சா எண்ணெயின் விலை நிலவரம் அதிகரிப்பால் எப்போதுமில்லாத விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து 100 ரூபாயை கடந்த விற்பனையானது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.

அதிலும் குறிப்பாக டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்ததன் காரணமாக, பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகினர். தமிழ்நாட்டில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 3ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 106 ரூபாய் 66 காசுக்கும், டீசலின் விலை 102 ரூபாய் 59 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டது.

அடுத்த நாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு அரசு 3ம் தேதி இரவு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைத்து உத்தரவிட்டது. இதன் காரணமாக, தீபாவளி அன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும், குறைந்தது.

அன்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாய் 40 காசுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 91 ரூபாய் 43 காசுக்கும், விற்பனையாகின. அன்றிலிருந்து இன்று வரையில் 84 நாட்கள் ஆகியும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை இது வாகன ஓட்டிகளிடம் மகிழ்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

Previous articleதமிழ்நாட்டில் இன்று மழை பெய்யவிருக்கும் பகுதிகள்!
Next articleவெடித்து சிதறிய திமிங்கலம்; சாலை எங்கும் ரத்த வெள்ளம்!