வெடித்து சிதறிய திமிங்கலம்; சாலை எங்கும் ரத்த வெள்ளம்!

0
77

உலகில் நடக்கும் சில அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், விசித்திரமான சம்பவங்கள் பல நூற்றாண்டுகள் நினைவில் நிற்கும். 18 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் ரத்த வெள்ளம் ஏற்படும் வகையிலான சம்பவம் நடந்தது. 18 ஆண்டுகளுக்கு முன்பு, பல நூற்றாண்டுகளாக நினைவில் இருக்கும் வகையில், நேற்று தைவானில் ஒரு சம்பவத்தில் சாலை வழியாக சென்றவர்கள் மீது திமிங்கலத்தின் ரத்தம் மற்றும் உள்ளுறுப்புகள் விழுந்ததால் பீதியில் அலறிக் கொண்டு ஓடினர்.

திமிங்கலத்தின் உடல் வெடித்து சிதறியதால் பீதி அடைந்த பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் அலறிக் கொண்டு ஓடினர். சாலை எங்கும் ரத்தம், உடல் உறுப்புகள், இறைச்சி ஆகியவை சிதறிக்கிடந்தது 50 ஆயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் வெடித்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

வாயு அழுத்தம் காரணமாக வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வகை வெடிப்பானது திமிங்கலங்களின் மிகவும் பொதுவான நிகழ்வு என தெரிவிக்கின்றனர். இந்த நிகழ்வானது, பாலூட்டியின் இறந்த உடல் சிதையும் போது உள்ளே உருவாகும் வாயுக்களின் அழுத்தத்தினால் ஏற்பட்டிருக்கலாம் என கூறுகின்றனர்.