3 பொருள் போதும்! கொசுவை ஒழிக்க! எளிமையான டிப்ஸ்!

0
381
#image_title

இந்த மழைக்காலங்களில் மாலை நேரங்களில் மற்றும் அல்ல , அனைத்து நேரத்திலும் காதில் வந்து சத்தத்தை எழுப்பி கொண்டு , கடித்து விட்டு ஓடி விடும் இந்த கொசுவை எப்படி ஒழிப்பது, கொஞ்சம் ஜன்னல் கதவு திறந்து வைத்தால் போதும் கொசு உள்ளே வந்து கடித்து பாடாய்படுத்தும். அந்த கொசுவை விரட்டி எடுக்க இப்பொழுது அற்புதமான இயற்கை வழிமுறை ஒன்றை பார்க்க போகின்றோம்.

தேவையான பொருட்கள்:

1. பெரிய வெங்காயம்
2. கட்டி சாம்பிராணி
3. கடுகு எண்ணெய்.

செய்முறை:

1. பெரிய வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.
2. மேலே உள்ளதை கட் செய்து நீக்கி விடவும்.
3. இப்பொழுது கட்டி சாம்பிராணி நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் கிடைக்கும். அதை வாங்கி தூள் செய்து எடுத்துக் கொள்ளவும்.
4. இப்பொழுது ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.
5. அடுப்பில் வைத்து மூன்று ஸ்பூன் அளவிற்கு கடுகு எண்ணெயை சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு கட்டிச் சம்பிராணி சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் அடுப்பில் வைக்கவும்.
6. சாம்பிராணி பொங்கி வரும் வரை காய்ச்சவும்.
7. ஆறவைத்து இதை எடுத்துக் கொள்ளுங்கள்.
8. இப்பொழுது இந்த எண்ணெயை வெங்காயம் முழுவதும் தடவி வைத்துக் கொள்ளுங்கள்.
9. இப்பொழுது ஜன்னல் பகுதிகள் அனைத்து இடங்களும் இந்த வெங்காயத்தை தொங்க விட்டீர்கள் என்றால் கொசு உங்கள் வீட்டில் பக்கம் வராது. இதேபோல் செய்து பயன்படுத்தும் பொழுது கொசு வருவதை தடுக்கலாம்.
மிகவும் எளிமையான டிப்ஸ் கண்டிப்பாக பயன்படுத்துங்க ,

Previous articleதூக்கி எறியும் பொருளில் இவ்வளவு நன்மைகளா!! பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை எரிந்து விடாதீர்கள்!!
Next articleஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரநாதர் திருகோவில் தேர்த்திருவிழா!!