தமிழகத்திற்கு மூன்று முதல்வர்கள்? சபரீசனுக்கு மாநிலங்களவை பதவி-திமுகவின் புதிய வியூகம்

Photo of author

By Sakthi

தமிழகத்திற்கு மூன்று முதல்வர்கள்? சபரீசனுக்கு மாநிலங்களவை பதவி-திமுகவின் புதிய வியூகம்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த முருகன் அண்மையில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து பாஜகவின் கொள்கையான ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே என்ற கொள்கையின் அடிப்படையில் தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார். அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு அவர் தொடர்ச்சியாக பேட்டி அளித்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டமாக சென்று தொண்டர்களை சந்தித்து அவர்களுடைய குறை நிறைகளை கேட்டறிந்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் நேற்றைய தினம் அண்ணாமலை பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் முறைப்படி முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்று இருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் 3 முதலமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று தெரிவித்து அனைவரையும் பரபரப்புக்கு உள்ளாக்கியது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார், ஆனாலும் இரண்டாவது முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலினும், மூன்றாவது முதலமைச்சராக ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உள்ளிட்டோரும் இருந்து வருகிறார்கள் என்று அவர் விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் அறையில் பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோரின் புகைப்படங்களுக்கு அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே திமுக ஒரு குடும்ப கட்சி, அந்த கட்சி குடும்ப அரசியலை நடத்தி கொண்டிருக்கிறது என்ற விமர்சனம் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் வந்து கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் ஸ்டாலின் திமுகவின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அவருடைய மகனை திமுக இளைஞரணி செயலாளராக நியமனம் செய்தார். அப்பொழுது பல ஊடகங்களும் மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்களும் அதுதொடர்பாக விமர்சனங்களை முன் வைத்தார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் தற்போது ஸ்டாலினின் மருமகனான சபரீசன் அவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்குவதற்காக சில ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

சபரீசன் சென்ற 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஸ்டாலினின் பிரச்சாரத்திற்கு உதவி புரிந்தது. தற்போது நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கு உதவிகரமாக இருந்ததற்கு கைமாறு செய்யும் விதமாக அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் தற்போது தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் ஸ்டாலினுடன் சேர்த்து 3 முதலமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று விமர்சனம் செய்திருப்பது அனைவராலும் யோசிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.