சளி, காய்ச்சல் என்றாலே இந்த காலத்தில் பயம் வந்து விடுகிறது. மூன்று நாள், மூன்று வேளை இதை குடித்தால் போதும். சளி காய்ச்சல் தலைபாரம் ஆகியவை குணமாகிவிடும்.
தேவையான பொருட்கள்:
1. வெற்றிலை – 2
2. வேப்பிலை – 10 இலை
3. துளசி – ஒரு கைப்பிடி
4. சீரகம் – ஒரு ஸ்பூன்
5. மிளகு – 5
6. மஞ்சள் – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
1. முதலில் ஒரு பாத்திரத்தில் ஒன்றை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றவும்.
2. அதில் வெற்றிலை 2 அதில் பிய்த்து போடவும். ,
3. பிறகு வேப்பிலை 10 எடுத்து போடவும்.
4. பிறகு துளசி இலைகளை எடுத்து போடவும்.
5. பின் சிறிதளவு சீரகம் எடுத்து போடவும்,
6. கொஞ்சம் மிளகு சேர்க்கவும்
7. பின் சிறிதளவு மஞ்சள் சேர்க்கவும்.
8. அனைத்தையும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
9. ஒன்றரை தம்ளர் தண்ணீர் அரை டம்ளர் ஆகும் வரை கொதிக்க விடவும்.
10. அதை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
இதை மூன்று நாள் மூன்று வேளை காலை, மதியம் , மாலை என குடித்து வந்தால் உடலில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்.