திருமணமான  3 நாட்களில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!  போலீஸ் தீவிர விசாரணை! 

Photo of author

By Amutha

திருமணமான  3 நாட்களில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!  போலீஸ் தீவிர விசாரணை! 

திருமணமாகி மூன்றே நாட்களில் புதுமணப்பெண் உயிரிழந்துள்ளார். கொலையா? தற்கொலையா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சோகமான இந்த சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.  அந்த மாநிலத்தில் பதொஹி மாவட்டத்தில் வசித்து வருபவர் முக்தார் அஹமது வயது.22. இவருக்கும் ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரோஷினி வயது.21, என்ற பெண்ணுக்கும் பெரியவர்களால் திருமணம் செய்ய நிச்சயக்கப்பட்டு அதன்படி கடந்த 17- ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர் அதற்கு அடுத்த நாள் 18-ஆம் தேதி இருவரின் வரவேற்பு நடந்துள்ளது.

வரவேற்பு நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் ரோஷினி எப்போதும் போல சாதரணமாகவே இருந்துள்ளார். அனைவரிடமும் சகஜமாக சிரித்துப் பேசியுள்ளார். அதனால் யாருக்கும் எந்தவித சந்தேகமும் எழவில்லை. பின்னர் வரவேற்பு முடிந்துள்ளது. ஆனால் வரவேற்பு முடிந்த சிறிது நேரத்திலேயே ரோசினிக்கு கடுமையான வாந்தி, மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல உடல் உபாதைகள் எற்பட்டுள்ளது . இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக ரோஷினியை பதொஹி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் சிகிச்சை பலனளிக்காமல் ரோஷினி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருமணமாகி மூன்று நாட்களில் புது மணப்பெண் இறந்ததால் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.