ரேஷன் கார்டை உடனடியாக ஒப்படையுங்கள்!! அரசின் அதிரடி உத்தரவு!!

0
93
Hand over Ration Card immediately!! Action order of the government!!
Hand over Ration Card immediately!! Action order of the government!!

ரேஷன் கார்டை உடனடியாக ஒப்படையுங்கள்!! அரசின் அதிரடி உத்தரவு!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் பயன் பெரும் விதமாக அரசு தரப்பிலிருந்து ரேஷன் கார்டு மூலியமாக உதவிகள் பல வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு உதவிகள் மட்டுமல்லாமல் மாநில அரசு உதவிகளும் ரேஷன் வைத்திருக்கும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உதவியை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ரேஷன் கார்டில் சில விதிகளும், நிபந்தனைகளும் அரசாங்கத்தால் மாற்றப்பட்டு வருகின்றன. இந்த விதிமுறை பற்றி ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இந்த இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு 2020 ஆம் ஆண்டு கரோனா காலத்தில் கொண்டு வந்தது. அதன் பிறகு கோடிக்கணக்கான மக்கள் இதன் மூலம் பலன் பெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த இலவச ரேஷன் வழங்கும் திட்டம் 2023 ஆன இந்த ஆண்டும் தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது. ரேஷன் அட்டை தகுதி இல்லாத பல பேர் இந்த இலவச ரேஷன் திட்டத்தை பயன்படுத்தியது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

ஆனால் தகுதியுள்ள சில அட்டைதாரர்கள் இதை பயன்படுத்திக் கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இப்பிரச்சனைக்கு தீர்வு காண அரசு, தகுதியற்றவர்களின் அனைவரது ரேஷன் கார்டையும் உடனடியாக அதிகாரிகளிடம் கொடுக்குமாறு அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதியற்றவர்கள் ரேஷன் அட்டையை ஒப்படைக்கவில்லை என்றால் அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் 100 சதுர மீட்டருக்கு அதிகமாக வீட்டு மனை, இடம், வீடு, இருசக்கர வாகனம், டிராக்டர், கிராமத்தில் குடும்ப வருமானம் இரண்டு லட்சத்துக்கும் மேல், நகரத்தில் ஆண்டு வருமானம் மூன்று லட்சத்துக்கும் மேல் இருந்தால் அவர்கள் தங்களுடைய ரேஷன் அட்டையை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டை ஒப்படைக்கவில்லை என்றால் அவர்கள்மீது நடவடிக்கை எடுத்து ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அவர்கள் ரேஷனில் வரும் உதவிகளை பெற்றிருந்தால் அதை திரும்ப வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உத்தரப் பிரதேசத்தில் பல இடங்களில் தகுதியானவர்களால் ரேஷன் உதவியை பெற முடியவில்லை. எனவே தகுதியற்றவர்கள் ரேஷன் அட்டையை ஒப்படைக்க வேண்டும் என்று அரசிடம் மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதன் மூலம் ஏழைக் குடும்பங்களுக்கு ரேஷன் அட்டையை வழங்கி வரலாம்.

author avatar
CineDesk