டாஸ்மாக் கடைகளுக்கு விடப்பட்ட 3 நாள் விடுமுறை!! அதிர்ச்சியில் மது பிரியர்கள்!!

Photo of author

By Gayathri

அரசு விடுமுறைகள் மட்டுமின்றி, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கையாக சில நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்பொழுது டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.

 

பொதுவாக , தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் குறிப்பிட்ட 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன் படி, திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் மட்டும் விடுமுறை விடப்படுவது வழக்கம்.

 

இதை தவிர சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தடுக்கும் வகையில் அந்த, அந்த மாவட்டங்களில் குறிப்பிட்ட கோயில் விஷேச நாட்கள், குரு பூஜை நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இதனை தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சவேரியார் ஆலய வருடாந்திர விழாவானது நேற்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவில் பல மாவட்டங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

 

இதனையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் சாவேரியார் ஆலய வட்டாரத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான பார்கள், சொகுசு ஹோட்டல் பார்கள் இன்று (டிசம்பர் 1ம் தேதி) முதல் டிசம்பர் 3ம் தேதி வரை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தேவாலய திருவிழாவையொட்டி மூடப்படும் டாஸ்மார்க் கடைகளில் விவரங்கள் :-

 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள உத்தரவின் படி , நாகர்கோவில் ரயில்வே ரோடு, கோட்டார் சந்திப்பு, பாறைக்கால் மடையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் டிசம்பர் 3ம் தேதி வரை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி கடையை திறந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.