3 நாள்.. போடப்படும் முக்கிய கையெழுத்து!! இந்தியர்களை குறி வைக்கும் ட்ரம்ப்!!

0
88

இந்தியா மற்றும் அமெரிக்கா இருவருக்குமிடையே சமீப காலமாக வாரத்தை போர் நீண்டு வருகிறது. குறிப்பாக வர்த்தக ரீதியாக இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு வரியானது மற்ற நாட்டை காட்டிலும் அதிகமாக இருப்பதாக தெரிவித்தனர். அதற்கேற்றார் போல தான் நாங்களும் வரி ஏய்ப்பு செய்வோம் என்று எச்சரிக்கையும் விடுத்தனர். அதேபோல தொழிலதிபர் உள்ளிட்டோருக்கு ட்ரம்ப் முடி சூடும் விழாவுக்கு தனிப்பட்ட அழைப்பிதல் சென்ற நிலையில் மோடிக்கு ஏதும் அவ்வாறு வரவில்லை.

அதற்கு மாறாக பரஸ்பர நாட்டின் ஒப்பந்தம் என்ற அடிப்படையிலேயே அழைப்பு விடுத்துள்ளனர். இதன் மூலம் மோடி மற்றும் ட்ரம்ப்-க்கு இடையே உள்ள இடைவெளியை அறிய முடிகிறது. இதற்கு அடுத்ததாக இருப்பது இந்தியர்களின் ஹெச் 1பி விசா பிரச்சனை தான். இந்த விசா மூலம் எண்ணற்ற இந்தியர்கள் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகின்றனர். கிட்டத்தட்ட இந்தியர்களே 73% பேர் இதில் இடம் பெற்றுள்ளனர்.

இதனால் கோபமடைந்த அமெரிக்க வாழ் நபர்கள் தங்களின் வேலையை இந்தியர்கள் பறித்துக் கொள்வதாக குற்றம்சாட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த விசா-வை ரத்து செய்யும் படி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் இந்த விசா குறித்து ட்ரம்ப் விதிமுறைகள் அனைத்தும் 2021 ஆம் ஆண்டே காலாவதியான காரணத்தினால் அதற்கு அடுத்திருந்த ஜோ பிடனால் புது எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வரவில்லை.

விசா புதுபிக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு முறையும் இந்தியா சென்று காத்திருக்க வேண்டியிருந்தது. தற்பொழுது அந்த முறையை மாற்றி அமெரிக்காவிலிருந்து செய்தும் கொள்ளும் வசதியை அமல்படுத்த உள்ளனர். இவ்வாறு இருக்கையில் அமரிக்காவின் வலது சாரிகள் இந்தியர்களை ஹெச்1பி விசா மூலம் பணியமர்த்த விரும்பவில்லை என்றாலும் ட்ரம்ப் திறமையானவர்களுக்கு கட்டாயம் இடம் உண்டு என்றே கூறி வருகிறார்.

அதே போல முன்பை காட்டிலும் எனது ஆட்சியில் இவர்களுக்கான பங்கு அதிகளவில் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அந்த வகையில் இவர் அதிபராக பதவியேற்று கையெழுத்து போடுவதில் இந்தியர்களுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகும் எனக் கூறி வருகின்றனர். இதன் மூலம் ஹெச் 1பி விசா குறித்து மகிழ்ச்சிகரமான செய்தியானது வெளிவர அதிக வாய்ப்புள்ளது.

Previous articleஉலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் டாப் 10 இணையதளங்களில் ஒன் இந்தியா! இந்திய அளவில் 2 ஆம் இடம்
Next articleகடன் தொல்லை.. கண்ணீர் விட்டு எமோஷனலான MGR!! ஷாக்கான பின்னணி வாழ்க்கை!!