மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த 3 போலி மருத்துவர்கள் கைது!

0
307
#image_title

ஓசூர் பகுதிகளில் மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த 3 போலி மருத்துவர்கள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேளகொண்டப்பள்ளி கிராமத்தில் மருத்துவம் படிக்காமல் அப்பகுதி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த சீமா (30) சௌகத் அலி (30) ஆகிய இருவரை கைது செய்த மருத்துவ குழுவினர்.

அவர்கள் நடத்தி வந்த 2 கிளினிக்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதேபோல் ஓசூர் அருகே உள்ள கொத்தகொண்டப்பள்ளி பகுதியிலும் மருத்துவ படிக்காமல் கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த ஸ்ரீனிவாசன் (35) என்பவரை போலீசார் மூலம் கைது செய்த மருத்துவ குழுவினர் அவர் நடத்தி வந்த கிளீனிக்கு சீல் வைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து மருத்துவ குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleநெசவு கூலித் தொழிலாளியின் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு 1330 திருக்குறளை ஒப்புவிக்கும் திறன்!
Next articleமதுரையில் பிரியாணிக்கு பிரபலம் பெற்ற அம்சவல்லிபவனில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு புகார்-உணவுப்பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ்!!