டிசம்பர் மாதத்தில் தொடங்க உள்ள 3 முக்கிய விதிகள்!! ஏழை மக்களை நேரடியாக பாதிக்கும்!!

0
111
3 important rules to start in December!! Directly affecting poor people!!
3 important rules to start in December!! Directly affecting poor people!!

2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் மத்திய அரசானது பல புதிய திட்டங்களை அமல்படுத்த உள்ளது. இதில் டெலிகாம் குறித்த திட்டங்கள் மற்றும் கிரெடிட் கார்டு குறித்த திட்டங்கள் என்பவை அடங்கும். இவை நேரடியாக ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1. புதிய டெலிகாம் விதிகள் :-

டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது, டிசம்பர் 1 ஆம் தேதி முதல், ஒடிபி (OTP) மெசேஜ்கள் உட்பட, அனைத்து கமர்சியல் மெசேஜ்களையும் ‘ட்ரேஸ்’ செய்யும் நடைமுறையை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என்று டெலிகாம் ஆப்ரேட்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக, டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கமர்சியல் ரீதியாக அனுப்பப்படும் மெசேஜ்கள் கண்காணிக்கப்படும் என்றும் அவை ஜியோ ஏர்டெல் மற்றும் வோடபோன் என எந்த நிறுவனத்தின் கீழ் இருந்தாலும் ஒரே விதி தான் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி செய்வதன் மூலம் ஸ்பேம் மெசேஜ்களை (Spam Messages) கட்டுப்படுத்தலாம் என்றும், மெசேஜிங் சேவைகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கலாம் என்றும் டிராய் நம்புகிறது.

2. புதிய கிரெடிட் கார்டு விதிகள் :-

பொதுவாக வங்கிகளில் வழங்கப்படும் கிரெடிட் கார்டு பலன்கள் மற்றும் வெகுமதி முறைகளை டிசம்பர் 1 ஆம் தேதியில் இருந்து மாற்ற திட்டமிட்டுள்ளன. யெஸ் பேங்க்கின் கீழ் இனிமேல் விமானங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கான வெகுமதிகளை பெறுவதற்கு வரம்பு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இதே போன்று, எச்டிஎப்சி பேங்க்கின் கீழ் ரெகலியா கார்டு வைத்து இருப்பவர்கள் ஒரு காலாண்டுக்கு கட்டாயமாக ரூ.1 லட்சம் செலவழிக்க வேண்டும். கடைசியாக எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் பேங்க் ஆகிய இரண்டும் தொழில்துறை போக்குகளுக்கு ஏற்ப ரிவார்டு பாயின்ட் அமைப்பு மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்களை திருத்துகின்றன.

3. புதிய ஆதார் அப்டேட் விதிகள் :-

யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக மாற்றுவதற்கு கடைசி தேதியாக டிசம்பர் 14ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் இதற்கான வழிமுறைகள் மாற்றப்படும் என்றும், கட்டணத்தின் அடிப்படையில் தான் இந்த வழிமுறைகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டைகளை பெற்று, அதில் எந்தவிதமான மாற்றங்களையும் / அப்டேட்களையும் செய்யாதவர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் இந்த இலவச சேவை மைஆதார் போர்ட்டலில் (myAadhaar Portal) மட்டுமே கிடைக்கும். ஆதார் மையங்களில் (Aadhaar Center) செய்தால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.

Previous articleஇலங்கைத் தமிழர்களுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவிகள்!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
Next articleபாகிஸ்தானில் கலவரம்.. இந்திய அணியின் நிலை என்ன? வன்முறையால் வெளியேறிய இலங்கை!