நாளுக்கு நாள் அதிகரிக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நோய்த்தொற்று பரவலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழகஅரசு பலகட்ட தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. தினசரி பாதிப்பானது 33 ஆயிரத்திற்கு மேல் சென்றுகொண்டிருக்கிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஒரு 31-ஆம் வரையில் தளர்வுகள் எதுவும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

எதிர்வரும் 31ஆம் தேதியுடன் இந்த முழு ஊரடங்கு முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை இன்னும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் நலனை கருத்தில் வைத்து தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், பொதுமக்கள் அவசியம் எதுவும் இல்லாமல் வீட்டிலிருந்து வெளியே வருவதையும், கூட்டங்களையும், தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், கடந்த ஐந்து தினங்களாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டி இருக்கிறது. நேற்று முன்தினம் 3 லட்சத்து ௨௩,915 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சென்ற வாரங்களில் தினசரி எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கீழ் இருந்தது இந்த நிலையில், தற்சமயம் இந்த எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

மக்கள் மத்தியில் தடுப்பூசி மீதான நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது. ஆகவே எல்லோரும் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் இந்த நோய் தடுப்பு ஊசியை செலுத்தி கொள்வதில் ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 3.6 லட்சம் பேர் இந்த தடுப்பூசியை செலுத்தி கொண்டிருக்கிறார்கள் என்று தமிழக சுகாதாரத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.