அதிர்ச்சியளிக்கும் பெட்ரோல் விலை!

0
171

இந்தியாவைப் பொருத்த வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறை இருந்து வருகிறது.

பொதுத்துறை நிறுவனங்களாக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாறுதலும் ஏற்படாமல் இருந்தது இந்த நிலையில், ஜூன் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தி வருகின்றன. இந்த எண்ணெய் நிறுவனங்கள்.

இந்த சூழ்நிலையில், சென்னையில் இன்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 காசுகள் உயர்ந்து 95 ரூபாய் 55 காசுக்கும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 89 ரூபாய் 65 காசுக்கும் விற்பனையாகி வருகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்திருக்கிறது.

Previous articleஆளுங்கட்சியை எச்சரித்த முக்கிய தலைவர்! அதிர்ச்சியில் திமுக!
Next articleநாளுக்கு நாள் அதிகரிக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here